கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க ரேஷன் கடைகளில் பழமரக்கன்றுகள் தரும் மாநில அரசு!

கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க ரேஷன் கடைகளில் பழமரக்கன்றுகள் தரும் மாநில அரசு!
Published on

சுமையான சூழலை அதிகரிக்கவும், கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஜார்கண்ட் அரசாங்கம், PDS அட்டை வைத்திருப்பவர்களுக்கும், மாநிலத்தில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கும் குறைந்தது இரண்டு பழ மரக்கன்றுகளை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது .

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

"ரேஷன் விநியோகத்தின் போது அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளுக்கும் குறைந்தது இரண்டு பழமரக்கன்றுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது கிராம மக்களின் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் (செடிகள் காய்க்கும் போது அதை விற்க முடியும்) சுற்றுச்சூழலின் நலனுக்காக மாநிலத்தின்  பசுமையை அதிகரிக்கவும் வழி செய்யும்,” என்று ஊரக வளர்ச்சித் துறை திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் போது சோரன் கூறினார்.

அரசாங்க பதிவுகளின்படி, ஜார்க்கண்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன, அவர்கள் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் பொது விநியோக அமைப்பு (PDS) கடைகளில் இருந்து ரேஷன்களைப் பெறுகின்றனர்.

பழமரக்கன்றுகளை விநியோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாநில பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் வனத்துறையுடன் விரைவில் விவாதிக்கப்படும் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

"பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை, வனத்துறையினருடன் கலந்தாலோசித்து, ஏராளமான ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு விரைவில் பழ மரக்கன்றுகள் வழங்குவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும். பழமரக்கன்றுகள் பயனாளிகளால் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா இல்லையா என்பதைப் பார்க்கவும் ஒரு அமைப்பு செயல்படும், ”என்று முதலமைச்சர் அலுவலகத்தை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

கூட்டத்தில், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மக்கள் வேலைக்காக இடம்பெயர்வது குறித்து முதல்வர் கவலை தெரிவித்ததோடு, இதை சரிபார்க்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

“வேறு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் இடம்பெயர்வது மிகவும் கவலையளிக்கிறது. MGNREGA இன் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் ஐந்து திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும், இதன் மூலம் கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் வேலைவாய்ப்பைப் பெற முடியும், ”என்று முதல்வர் கூறினார்.

மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படுவதை ஒருங்கிணைத்து உறுதி செய்யுமாறு துணை ஆணையர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விளையாட்டில் ஆர்வமுள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் விளையாட்டு கருவிகள் சென்றடைவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் முதல்வர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com