
மனிதர்கள் ஏதேனும் குற்றம் நடந்துவிட்டால், அதை கண்டுப்பிடிக்க நாயை பயன்படுத்துவார்கள். ஏனெனில், அதற்கு மோப்ப சக்தி அதிகம். ஆனால், நடந்த குற்றத்தையும், குற்றவாளியையும் சாட்சி சொல்லி காட்டிக் கொடுத்த கிளி பற்றி தெரியுமா? அதுவும் இந்த சம்பவம் நம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
பிப்ரவரி 20, 2014 அன்று விஜய் சர்மா என்ற ஒரு நியூஸ்பேப்பர் எடிட்டர் அவர் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அவருடைய வீட்டிற்கு முன் அவர் வளர்த்த நாய் செத்து கிடந்துள்ளது. இதை பார்த்த அவருக்கு ஏதோ தவறாக உள்ளதே என்று தோன்றியுள்ளது. அதை எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் சென்று பார்க்கிறார் அவருடைய மனைவி நீலம் இறந்துக் கிடக்கிறார்.
வீட்டில் யாருமே இல்லை. அவர் வளர்த்த கிளி மட்டும் ஓரத்தில் கத்திக் கொண்டேயிருந்திருக்கிறது. உடனடியாக போலீஸ்க்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். போலீஸ் வீட்டில் வந்து பார்த்ததில் எந்த தடையமும் கிடைக்கவில்லை. இந்த செய்தி பக்கத்தில் இருந்தவர்களுக்கு பரவி ஒவ்வொருத்தராக வீட்டிற்கு வர ஆரம்பிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு 10 மணிநேரம் கழித்து அவரின் சொந்தக்காரனான அஷிட்டோஷ் என்பவன் வீட்டிற்கு வந்துள்ளான். மற்றவர்கள் யாரையும் பார்த்து கத்தாத அந்த கிளி அஷிட்டோஷை மட்டும் பார்க்கும் போதெல்லாம் கத்தியுள்ளது. இதனால் மற்றவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. அந்த கிளி முன்பு அமர்ந்து யார் கொலை செய்திருப்பார்கள் என்று பேசிக்கொண்டே ஒவ்வொரு பெயராக சொல்லி பார்த்துள்ளனர்.
அஷிட்டோஷ் என்ற பெயரைக் கேட்டதும் கிளி கத்தியுள்ளது. 'அவன் தான் கொலை செய்தானா?' என்று கேட்டபோது தலையை ஆட்டியுள்ளது. இதை உடனேயே போலீஸில் சொல்லவும் போலீஸ் அவனை கைதி செய்தி விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவன் கொலை செய்ததை ஒத்துக் கொண்டான். அஷிட்டோஷ் மற்றும் அவன் நண்பனும் இவர்கள் வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்று வந்துள்ளனர். நீலம் அவர்களை பாரத்துவிட்டதால், அவரை கொன்று விட்டனர். ஒருவேளை அந்த நாயினால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து அதையும் கொன்றுவிட்டனர்.
ஆனால், 'இந்த கிளி என்ன செய்யப்போகிறது?' என்று இதை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்த கிளி இவர்களை சரியாக நியாபகம் வைத்துக் கத்தியதால் தான் போலீஸால் கொலைக்காரனை சீக்கிரமாக பிடிக்க முடிந்தது. அவர்கள் இருவருக்கும் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த கேஸில் எப்படி கிளி உதவி செய்ததோ அதேப்போல உலகில் பல குற்றங்களை கண்டுப்பிடிக்க நிறைய விலங்குகள் உதவி செய்துள்ளது. இதை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளதல்லவா?