மூன்று கால்களைக் கொண்ட உலகின் விசித்திர மனிதர்!

Frank Lentini
Frank Lentini
Published on

ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள், தலைகள் ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள் போன்ற எத்தனையோ விசித்திரமான பிறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், ஒரு மனிதர் மூன்று கால்களுடன் பிறந்திருக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

பொதுவாக இதுபோன்ற இயற்கைக்கு விசித்திரமான பிறப்புகள், அறிவியல் ரீதியாக அதன் காரணங்களைக் கொண்டிருக்கும். மனிதர்கள் மட்டும் இப்படி பிறப்பதில்லை, ஆடுகள், மாடுகள் போன்ற உயிரினங்களும் இதுபோல பிறக்கும். நாம் இதுபோன்ற செய்திகளை அவ்வப்போது கேட்டாலும், மூன்று கால் மனிதர் செய்தி சற்று விசித்திரம்தான்.

அந்தவகையில் அவர்பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம். பிராங்க் லெண்டனி என்பவர் சிசிலியில் 1889ம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர். இவர் பிறக்கும்போதே மூன்று கால்களுடன் பிறந்ததால், அந்தக் காலத்தில் அவரை அனைவரும் நிராகரித்தனர். இவர்களது பெற்றோர் இவரை அவரது அத்தையிடம் ஒப்படைத்தனர். அவர்தான் இவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சைப் பார்த்தார். இவருக்கு இரண்டுக் கால்கள் நமக்கு இருப்பதுபோல நேராக இருந்தாலும், மூன்றாவது கால் சரியாக நேராக இல்லை. இவர் மூன்று வயதாக இருக்கும்போதே இந்தக் கால் நேராக்கப்பட்டது. ஆனால், அதனை நடக்க பயன்படுத்த முடியாது.

அவரது இடுப்பின் வலது பக்கத்திலிருந்து ஒரு முழு அளவிலான கால் நீண்டு, அதன் முழங்காலில் இருந்து ஒரு சிறிய கால் நீண்டிருந்தது. இவருக்கு மொத்தம் மூன்று கால்கள், நான்கு பாதங்கள் மற்றும் 14 கால் விரல்கள் இருந்தன. இவர் தனது எட்டு வயதிலிருந்து மேஜிக் ஷோக்களில் காட்சிப்படுத்தப்பட்டார். பின்னாட்களில், அவர் தனது முழு திறமையையும் மேஜிக் ஷோக்களிலேயே காட்டி, மக்களின் பேராதரவைப் பெற்றார். தன் வாழ்நாளில் பெரிய பிரம்மாண்டமான ஷோக்களிலும் புகழ்பெற்ற ஷோக்களிலும் பங்குபெற்று பிரபலமானவரானார்.

இதையும் படியுங்கள்:
இந்திய காகங்களை கொல்லும் கென்யா! கொடுமைதானே மக்களே?
Frank Lentini

இவர் இளைஞராக இருந்தபோது, தனது மூன்றாவது காலை பயன்படுத்தி கால்பந்து விளையாட்டில் பங்குப்பெற்றார். நம்மை போல சாதாரண கால்கள் இருந்தாலும், அவருடைய இரு கால்களுக்கும் உயரம் வித்தியாசம் இருந்தது. ஆம்! ஒரு கால்  99 சென்டிமீட்டர் மற்றும் மற்றொன்று 97 சென்டிமீட்டர், மூன்றாவது கால் 91 சென்டிமீட்டர்கள் மட்டுமே இருந்தது.

பல மேஜிக் ஷோக்களில் பணியாற்றிய இவரை, அப்போது அனைவரும் தி கிங் என்றே அழைப்பார்கள். இவர் 1966ம் ஆண்டு உயிரிழந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com