மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ‘ரூ.50,000 + 1 சவரன் தங்கம்’ தரும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி..?

திருமண சடங்கு
திருமண சடங்குhttps://www.seithipunal.com
Published on

தமிழக அரசு பெண்களுக்கான பல நலத்திட்டங்களை கொண்டு வந்து அதனை வெற்றிகரமாகவும் செயல்படுத்தி வருகிறது. அவர்கள் பொருளாதார ரீதியாக பலமாக இருப்பதற்காக அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நிறைய முற்போக்கான திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. இதன்மூலமாக பெண்கள் எந்த விதத்திலும் யாரிடமும் அடிமைப்பட்டுவிடக்கூடாது அல்லது அவர்களுடைய வாழ்க்கை எங்கேயும் தேங்கி விடக்கூடாது என்பதற்காக பல நலத்திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

அதிலும் மிகவும் முக்கிமான திட்டமாக, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வதற்காக தமிழக அரசு ஆதரவு தருகிறது. அப்படி மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுக்கிறது. இது என்ன திட்டம், எவ்வளவு ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள், யார் எல்லாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...

தமிழகத்தில் கைப்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக கணவனை இழந்த பெண்களை, மறுமணம் செய்து ஊக்குவிக்கிறது. அப்படி மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு அரசு உதவித்தொகையும் கொடுக்கிறது. இந்த திட்டம் 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை, எளிய எண்ணற்ற விதவை பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
கலாச்சாரச் சீர்கேடும், இன்றைய திருமண வாழ்வின் சவால்களும்!
திருமண சடங்கு

விதவை மறுமண நிதியுதவி இரண்டு திட்டங்களில் செயல்படுகிறது.

* மறுமணம் செய்து கொள்ளும் பெண் பட்டப்படிப்பு (Degree) அல்லது பட்டயப்படிப்பு (Diplomo) முடித்திருந்தால் இந்த திட்டத்தின் கீழ் ரூ.50,000 மற்றும் தாலிக்காக ஒரு சவரன் தங்க நகையும் கிடைக்கும்சு. இந்த மொத்த தொகையில் ரூ.30,000 ரொக்கமாக உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மீதி 20,000 ரூபாயை national savings certificate என்ற தேசிய சேமிப்பு திட்டத்தில் இந்த பெண்ணின் பெயரில் டெபாசிட் செய்யப்படுகிறது.

இது இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள fixed deposit scheme. இந்த scheme வருடத்திற்கு 7.7 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. அந்த scheme 5 வருடம் கூட்டு வட்டியுடன் சேர்த்து முதிர்ச்சி அடையும். 5 வருடங்களுக்கு பிறகு 30000 ரூபாயையும், அதனுடன் சேர்த்து அந்த வட்டியையும் மறுமணம் செய்த அந்த பெண் எடுத்துக் கொள்ளலாம்.

* அதுவே மறுமணம் செய்து கொள்ளும் பெண் 8,10,12-ம் வகுப்பு வரை படித்தவர்களாக இருந்தால், திருமணத்திற்கு ரூ.25,000 உதவித்தொகை மற்றும் தாலிக்கு ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் வழங்கப்படும். மொத்த தொகையில் ரூ.15,000 ரொக்கமாகவும், மீதி தொகை ரூ.10000 national savings certificate என்ற தேசிய சேமிப்பு திட்டத்தில் இந்த பெண்ணின் பெயரில் டெபாசிட் செய்யப்படும். 5 ஆண்களுக்கு பிறகு தேசிய சேமிப்பில் இருக்கும் தொகையை வட்டியுடன் சேர்த்து கணவன், மனைவி இருவரும் எடுத்துக் கொள்ள முடியும்.

தேவையான தகுதிகள்

* கணவனை இழந்த பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

* தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் பலனை பெற முடியும்.

* விவாகரத்து அல்லது வேறு காரணங்களுக்காக கணவனை பிரிந்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வாங்க முடியாது.

* மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு 20 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* அந்த பெண் மறுமணம் செய்து கொள்ளபோகும் ஆணின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.

* மறுமணம் செய்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பித்தால் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும்.

* ஆண்டு வருமானம் என எந்த உச்சவரம்பும் இல்லை.

தேவையான ஆவணங்கள்

* இறந்த கணவனின் இறப்பு சான்றிதழ்

* மறுமணம் செய்து கொள்ளும் பெண், முதலில் திருமணம் செய்து கொண்ட திருமணத்திற்கான சான்று

* விதவை சான்றிதழ்

* மறுமணத்தின் திருமண புகைப்படம்

* மறுமணம் செய்து கொண்டதற்காக திருமண அழைப்பிதழ்

* மறுமணம் செய்து கொள்ளும் பெண், ஆணின் வயது சான்றிதழ் (பிறப்பு சான்றிதழ், பள்ளி மார்க் ஷீட்) அல்லது ஆதார் கார்டு

* மணமகனுக்கு முதல் திருமணம் என்பதற்கான சான்று

* கணவன் மனைவி இணைப்பு வங்கி கணக்கு புத்தக நகல்,

* பெண்ணின் ஆதார் கார்டு

* ரேஷன் கார்டு

* சாதி சான்றிதழ்

* மணமகன், மணமகள் கல்வித்தகுதி சான்றிதழ்

விண்ணப்பிப்பது எப்படி?

உங்கள் வீட்டின் அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் போது ரசீதை மறக்காமல் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பதை வாங்கி பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அதனுடன் சேர்த்து ஒப்படைக்க வேண்டும். உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அனைத்து சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வங்கி கணக்கில் தொகை டெபாசிட் செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
திருமணம் ஒரு சுமையா? விருப்பமில்லா திருமணத்தின் பின் உள்ள உண்மைகள்!
திருமண சடங்கு

- உங்களுக்கு தெரிந்த யாராவது கணவரை இழந்த பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தமிழக அரசின் இந்த திட்டத்தை பற்றி தெரியப்படுத்துங்கள். அது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com