அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியானது!

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியானது!

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா இதனை, பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி, சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ். செம்மரக்கடத்தலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகாவும் பட்டையை கிளப்பியிருந்தனர்.

நடிகை சமந்தா, “ஊ அண்டாவா..” பாடலுக்கு நடனமாடியிருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டிற்கு முன்பு வெளியாகியிருந்த இப்படத்தின் தாக்கம், இப்போது வரை நீடித்து வருகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தினர்.புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியிடப்படவுள்ள புஷ்பா2 திரைப்படம் பான் இந்தியா அளவில் உருவாகியுள்ளது. இந்த படத்தில், முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த நட்சத்திரங்கள் அப்படியே தொடருகின்றனர். முந்தைய படத்தில் கடைசி நிமிட காவல் அதிகாரியாக வந்து மாஸ் காட்டிய மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலிற்கு, இந்த இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் கொடுத்து கதையமைக்கப்பட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5ஆம் தேதி புஷ்பா2 படம் குறித்த அப்டேட் வெளியானது. தற்போது

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com