உலகின் இரண்டாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?

Diamond
Diamond
Published on

தென்னாப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1905ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 3106 கரட் கல்லினன் (Cullinan) வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரேனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில்தான் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. 

பின் 2019ம் ஆண்டு இதே சுரங்கத்தில் 1758 கரட்செவாலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தை பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton ) வாங்கியது. முன்னதாக 2017ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 கரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒரு பிரித்தானிய நகைக்கடைக்காரர் ரூ.444 கோடிக்கு வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து 1905ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட வைரத்திற்கு பிறகு இப்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரம் உலகின் பெரிய வைரமாக சொல்லப்படுகிறது. கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கர்ப் ( Lucara Diamond Corp) நிறுவனத்தினால் போட்ஸ்வானா தலைநகர் கபரோனில் இருந்து 500 கி.மீ தொலைவிலுள்ள கெய்ரோ (Cairo) சுரங்கத்திலே 2492 கரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போட்ஸ்வானாவின் ஜனாதிபதி மொக்வீட்சி மசிசி வியாழக்கிழமை பிற்பகுதியில் பாரிய கல்லை பார்வையிட்டார். இது உலகின் இரண்டாவது பெரியது என்பதை அவரது அரசாங்கம் உறுதிச் செய்தது.

இந்த வைரத்தை மதிப்பிடுவது அல்லது எப்படி விற்கப்படும் என்பதை விரைவில் முடிவு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது பெரிய வைரங்களைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. வைரத்தை கண்டுபிடித்த கனடிய சுரங்க நிறுவனமான Lucara Diamond Corp-இன் போட்ஸ்வானா நிர்வாக இயக்குனர் நசீம் லஹ்ரி, "இது ஒரு வரலாற்று கண்டுபிடிப்பு" என்றார்.

இதையும் படியுங்கள்:
இதுதான் இந்தியாவின் அடையாளம் – போலந்தில் பிரதமர் உரை!
Diamond

இப்படி உலகின் பெரிய வைரங்கள், மதிப்புமிக்க வைரங்கள் அடிக்கடி போட்ஸ்வான சுரங்கத்தில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், போட்ஸ்வானா உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தி நாடுகளில் ஒன்றாக உள்ளதோடு, உலகின் வைரத்தில் 20% இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com