மனிதன் மரணத்திற்குப் பின் என்னவாகிறான் என்ற கேள்வி காலங்காலமாக தத்துவவாதிகளையும், ஆன்மீகவாதிகளையும், ஏன் சாதாரண மனிதர்களையும் கூட ஆட்டிப்படைக்கும் ஒரு புதிரான விஷயம்.
மனிதன் மரணத்தைவிட வாழ்வையே விரும்புகிறான். ஆனால், பிரபஞ்சத்தில் பிறந்த எந்த உயிரனமானாலும், ஒரு நாள் மரணிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆகையால் மரணத்தை அது வரும்போது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிஞர்களும் ஆன்மீகவாதிகளும் மக்களுக்கு போதித்து வருகிறார்கள். மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? மீண்டும் புவியில் பிறப்போமா? இல்லை சொர்க்கத்தில் வாழ்வோமா? நரகத்தில் வாழ்வோமா?
மரணம் குறித்து பல ஆராய்ச்சிகளில் பல விஷயங்கள் தெரிய வந்திருக்கிறது.
இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகிறான் என்ற கேள்விக்கு அறிவியல் இன்னும் முழுமையான பதிலை அளிக்கவில்லை. ஆனால், மரணத்தை நெருங்கியவர்களின் அனுபவங்களை ஆராய்வதன் மூலம், பல யூகங்கள் நாள்தோறும் வரதான் செய்கின்றன.
அந்தவகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மரணம் என்பது ஒரு முடிவு இல்லை. அது மனிதனின் மாயை என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்க மருத்துவரும் விஞ்ஞானியுமான ராபர்ட் லான்ஸா மற்றும் இவரது புத்தகமான பயோசென்டிசம் இறப்பு ஒரு முடிவில்லாத எண்ணிக்கையில்லாத பிரபஞ்சங்களுக்கு ஒரு கதவாக இருக்கலாம் என்று கூறுகிறார். ராபர்ட் லான்ஸா ஸ்டெம் செல்கள் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் குவாண்டம் மெக்கானிக்ஸ், வானிய அறிவியல் துறைகளிலும் ஆராய்ச்சி செய்து வருகிறார். இதன் விளைவாகத்தான் பயோசென்டிரிசம் என்ற கோட்பாட்டைக் கொண்டு வந்தார்.
இவர் பிரபஞ்சத்தை அமைத்தது நாம் தான் என்ற தியரியை வைத்திருக்கிறார். அதாவது நாம் ஸ்க்ரீனில் படம் பார்ப்பதுபோல்தான், நாம் பிரபஞ்சத்தை ஸ்க்ரீன் மூலம் பார்க்கிறோமாம். பிரபஞ்சத்தின் வெவ்வேறு கதைகள், வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு முடிவுகளை நீங்கள் அணுக வேண்டி அவை அனைத்தின் முடிவிலும் இறுதியாக நீங்கள் மட்டும்தான் இருப்பீர்கள். வாழ்க்கை சுழற்சியும் அப்படித்தான் நடக்கிறது என்கிறார்.
வாழ்க்கைத்தான் மாறுகிறதே தவிர, உயிர்நிலை மாறுவதில்லை. ஒரு கதை முடியும் நேரத்தில், வேறு எங்கேயே வேறு ஒரு கதை தொடர்கிறது என்பதுதான் இவரின் கூற்று.