“ராகுல் யாத்திரையில் எந்த ரகசியமும் இல்லை”!

 ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி எம்.பி.யை சந்தித்தவர்களிடம் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல் யாத்திரையில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், இதைக்கண்டு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

தில்லியை அடைந்த ராகுலின் யாத்திரை தனது முதல் கட்ட பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது. மீண்டும் ஜனவரி 2-இல் தான் ராகுல் பயணத்தை தொடர திட்டமிட்டுள்ளார்.

கடந்த 23 ஆம் தேதி ராகுல் யாத்திரையில் செல்பவர்கள் ஓய்வெடுக்கும் வேனில் சட்டவிரோதமாக சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் விசாரித்தபோது அவர்கள் மாநில புலனாய்வுத்துறை அதிகாரிகள் என்பது தெரியவந்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வைபவ் வாலியா கூறியதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் கல்வியாளர், பொருளாதார நிபுணர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும், பல்வேறு அமைப்புகளும், தொழிற்சங்க பிரமுகர்களும் பங்கேற்று ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன்கூட ஒரு இந்தியன் என்ற முறையில் இதில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தொற்றை காரணம் காட்டி ஒற்றுமை யாத்திரையை நிறுத்த முயன்றதாக பா.ஜ.க. மீது ஏற்கெனவே காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், ராகுலுடன் யாத்திரை செல்பவர்கள் சாதரணமானவர்களே. காங்கிரஸின் தொடர் தோல்வியால் விரக்தியில் ராகுல் என்னவெல்லாமோ பேசுகிறார். அது மக்களிடம் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com