போருக்கான முடிவு இதுதான் – உக்ரைன் அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி!

Ukrain President With Modi
Ukrain President With Modi
Published on

ஜி7 மாநாட்டிற்காக இந்திய பிரதமர் மோடி உட்பட முக்கிய உலக நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் ஒன்றுக் கூடியுள்ளனர். அப்போதுதான், இந்திய பிரதமர் மோடி உக்ரைன் அதிபரை சந்தித்து போருக்கான முடிவைப் பற்றி பேசியிருக்கிறார்.

நரேந்திர மோடி, நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பிரதமரானார். பிரதமராகப் பதவியேற்றவுடனே முதல் பயணமாக இத்தாலிக்கு சென்றார். அங்கு முக்கிய உலக தலைவர்கள் பங்குபெறும் ஜி7 மாநாடு நடைபெறுகிறது. அதற்காக இத்தாலி, மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்தது.

சோவியத் காலத்தில் சோவியத்திற்கு போட்டியாக இறங்கியதுதான் நேட்டோ. சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட நேட்டோ விரிவடைந்து வருகிறது. அமெரிக்காவின் நேட்டோ கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து உக்ரைன் வரை வந்தது. உக்ரைன் ரஷ்யா அருகே இருக்கும் நாடு. ஆனால், உக்ரைன் அமெரிக்காவின் ஆதரவு நாடு என்பதால், நேட்டோவுக்கு அனுமதியளித்தது.

இதனால், அமெரிக்கா படைகள் நேரடியாக ரஷ்யாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளது என்பதால், ரஷ்யா உக்ரைன் மீது கடும்கோபம் கொண்டது. இதனையடுத்து ரஷ்யா 2022ம் ஆண்டே போரை அறிவித்தது. ரஷ்யா 2 வாரங்களில் போரை முடிக்க வேண்டும் என்று நினைத்தது.

ஆனால், அமெரிக்கா உக்ரைனுக்கு உதவி செய்வதால், போர் 2 வருடங்களாக நீடித்து வருகிறது. இதுவரை ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு மனிதாபிமான உதவியாகவும், ரூ.24 ஆயிரம் கோடி வளர்ச்சி நிதி என்கிற பெயரிலும், ரூ.1.9 லட்சம் கோடி நேரடி உதவியாகவும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது. இதனால், போர் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில்தான், ஜி7 மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து மோடி தனது X தளத்தில் பேசியதாவது, "விலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. போர் குறித்து, இந்தியா மனிதாபிமானத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை தீர்வு என்று நம்புகிறது. பேச்சுவார்த்தைதான் அமைதிக்கான வழி என்றும் நம்புகிறது." என்றார்.

இதையும் படியுங்கள்:
கூட்டமாக இறந்து கிடந்த காகங்கள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Ukrain President With Modi

போருக்கான முடிவு பேச்சுவார்த்தைதான் என்று உக்ரைன் அதிபரிடம் பேசியதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடமும் உலக நடப்பு பற்றி உரையாடியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com