ரேஷன் கார்டு வகையை மாற்ற இதுதான் கடைசி சான்ஸ்..! அமைச்சரின் முக்கிய அறிவிப்பு..!

ration card type
ration card
Published on

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது வரை தமிழ்நாட்டில் 2.20 கோடிக்கும் அதிகமாக ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ரேஷன் கார்டில் ஸ்மார்ட் கார்டுகள் அறிமுகமான போது, அதில் கார்டு வகையும் குறிப்பிடப்பட்டது. இதில் ஒருசில கார்டுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும் கிடைக்கும். ஆனால் ஒருசிலருக்கு அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைக்காது. இதற்கு முக்கிய காரணமே கார்டு வகை தான்.

இந்நிலையில் ரேஷன் கார்டு வகையை எளிதாக மாற்றிக் கொள்ள பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரான சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை - NPHH, முன்னுரிமை குடும்ப அட்டை - PHH, சர்க்கரை விருப்ப அட்டை NPHH-S, அந்தியோதயா அன்ன யோஜனா - AAY மற்றும் பொருளில்லா அட்டை - NPHH-NC ஆகிய 5 வகையான ரேஷன் கார்டுகள் செயலில் உள்ளன. குடும்பங்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து தான் கார்டு வகை தீர்மானிக்கிறது.

முன்னுரிமை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மானிய விலையில் அரிசி, எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடையில் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு இருந்தால் குறைவான சலுகைகளே கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் யாரேனும் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டை வைத்திருந்தால், அவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் முன்னுரிமை ரேஷன் கார்டு கிடைக்கும்.

தற்போது ஆங்காங்கே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற்று வருவதால், இந்த முகாம்களில் ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கான சேவைகள் விரைந்து வழங்கப்படுவதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு..! ரேஷன் கார்டில் இந்த அப்டேட்டை உடனே செய்யுங்கள்..!
ration card type

தமிழக மக்களுக்கு பல விதமான மானியங்களும், சேவைகளும் கிடைக்க ரேஷன் கார்டு முக்கிய அங்கமாக உள்ளது. மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு கூட ரேஷன் கார்டு அவசியம். இந்நிலையில் ஒருசிலருக்கு தம்முடைய ரேஷன் கார்டு எந்த வகையில் சேர்ந்துள்ளது என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றனர். பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் போதே கார்டு வகையை சரியாகத் தேர்ந்தெடுத்துக் செய்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கடையில் ஜவ்வரிசி..!விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
ration card type

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com