தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கை மாறியதற்கு இதுதான் காரணம்!

Srilanka
Srilanka
Published on

வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக வலு மாறி, தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இங்கு பெய்ய வேண்டிய மழை, இலங்கைக்கு மாறிவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கு முன்னர் ஒரு காற்றழுத்த தாழ்வு  நிலை ஏற்பட்டது. அப்போது சென்னை போன்ற இடங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மல்லிகை கடைகள் அனைத்தையும் காலியாக்கிவிட்டனர். பல முன்னேற்பாடுகளை செய்துக்கொண்டனர். ஆனால், அவ்வளவு மழை இல்லாத காரணத்தால், மக்கள் ஏமாந்துப்போனார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சரியான அப்டேட்டை கொடுங்கள், இல்லையெனில் அதனால் பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்துக்கள் எழுந்தன.

இதனையடுத்து இந்த முறை துல்லியமாக ஒவ்வொரு நகர்வுகளையும் அப்டேட் கொடுத்தார்கள். அந்தவகையில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுமாற வாய்ப்பு இருப்பதாக சொல்லி வந்த நிலையில், திடீரென்று நகர்வின் வேகம் குறைந்துவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த வேகக்குறைவிற்கு காரணம், அரபிக்கடலின் உயர் அழுத்தம், பசிபிக் கடலின் உயர் அழுத்தம், மேற்கத்திய தாழ்வு நிலை போன்ற காரணங்களால் புயல் உருவாக தாமதமானதாகவும், 13 கிலோமீட்டர் வரை நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நகராமல் நின்றதால் புயல் உருவாகவில்லை எனவும் கூறப்பட்டது. இதனால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

புயல் அறிவிப்பில் மட்டுமின்றி, மழை குறித்தான அறிவிப்பிலும் சில மாற்றங்கள் கூறப்பட்டன. அதிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட பகுதியில் லேசான மழை மட்டுமே பெய்ததாகவும் தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள்:
தொடர்ந்து அதிகரிக்கும் 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை; புட்டு புட்டு வைக்கும் புள்ளிவிவரங்கள்!
Srilanka

இதற்கு காரணம், கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் சில பகுதிகள் இலங்கை நிலப்பரப்பில் ஊடுருவியதால், தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கை பகுதியில் பெய்து விட்டது.

இதனால், வட இலங்கை பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு சுற்றை எதிர்க்கொள்ள இலங்கை மக்கள் தயாராக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com