2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகள் புதிய தலைமுறையினர் என்றும், அவர்கள் இப்படித்தான் அழைக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் பரவுகின்றன. இதுகுறித்தான முழு செய்தியைப் பார்ப்போம்.
ஆதி மனிதன் தோன்றிய காலங்களிலிருந்து இந்த 'தலைமுறை' என்பது இருந்து வருகிறது. ஆனால், எத்தனை தலைமுறைகளாக மனிதன் வாழ்ந்து வருகிறான் என்று கேட்டால், அது யாருக்குமே தெரியாது.
தலைமுறை தாண்டி, தலைமுறை தாண்டி மனிதன் வாழ்ந்து வருகிறான். இன்னும் எத்தனை தலைமுறைகள் மனிதன் வாழ்வான் என்பதும் புதிர்தான்.
அதேபோல் ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதோ ஒரு மாற்றமும் முன்னேற்றமும் நிகழத்தான் செய்கிறது.
அந்தவகையில் தற்போது தலைமுறைகளுக்கு பெயர் வைக்கும் புதிய ட்ரெண்ட் தான் வைரலாகி வருகிறது.
ஆம்! நாம் சமீபக்காலமாக Genz என்ற வார்த்தையை பயன்படுத்தி வருவது நம் அனைவருக்குமே தெரியும். அதாவது குறிப்பிட்ட சில ஆண்டிலிருந்து சில ஆண்டு வரை பிறந்த குழந்தைகளை நாம் Genz என்று அழைப்போம். ஆனால், நமக்கு தெரியாத பல விஷயம் இருக்கிறது. ஆம்! 20ம் நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கும் இதுபோன்ற பெயர்கள் இருக்கின்றன. பெயர்கள் என்னவென்று பார்ப்போமா?
1989 முதல் 1996 வரையிலான தலைமுறையை மில்லியனியல் என்றும், 1996 முதல் 2010 வரையிலான தலைமுறையை ஜெனரேஷன் இசட் என்றும் 2010 - 2024 ஆம் ஆண்டு பிறந்தவர்களை ஜெனரேஷன் ஆல்பா என்றும் கூறப்பட்டு வருகிறது.
இப்படி 19ம் நூற்றாண்டுகளிலிருந்தே தலைமுறைகளுக்கு பெயர் சூட்டப்பட்டாகிவிட்டது. ஆனால், நமக்கு இந்த ஆண்டு முதல்தான் Genz என்ற வார்த்தைமூலம் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.
அந்தவகையில் தற்போது அடுத்த தலைமுறைக்கான ஆண்டுகளும் பெயரும் வெளியாகியிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகள் ஜென் (ஜெனரேஷன்) பீட்டா என்று கூறப்படும் நிலையில், இந்த தலைமுறையினர் பெரும்பாலும் ஜென் ஆல்பா மற்றும் ஜென் இசட்டுகளின் வாரிசுகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த தலைமுறைக்கு பெயர் வைக்கும் விஷயம் சற்றும் புதிதாகவும் ஜாலியாகவும் இருக்கிறது என்றாலும், ஞாபகம் வைத்துக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஜென்ஸ் ஆல்பா மற்றும் பீட்டா ஆகியவை இப்போதைக்கு நினைவில் இருந்தால் போதும். ஏற்கனவே ஜென் இசட் தான் நமக்குத் தெரியுமே...