

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பிரமாண்டமான விலங்கு தான் டைனோசர். சுமார் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இது இனம் அழிந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சுமார் 30 மீட்டர் நீளமும், பல டன் எடையுடனும் வாழ்ந்துள்ள டைனோசர்கள் அழிவதற்கு பெரிய விண்கல் பூமியைத் தாக்கியதால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
டைனோசர்கள் பற்றிய தொடர் ஆராய்ச்சியில் எலும்புகள், பற்கள், முட்டைகள், கால்தடங்கள் போன்ற அதன் புதைபடிமங்கள் (Fossils) அமெரிக்கா, சீனா, அர்ஜென்டினா, கனடா, மங்கோலியா , ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உலகிலேயே Tyrannosaurus rex, Triceratops போன்ற புகழ்பெற்ற டைனோசர்களின் எலும்புகள், பற்கள், முட்டைகள், கால்தடங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது என்கின்றனர். மேலும் அண்டார்டிகாவை தவிர அனைத்து கண்டங்களிலும் கிடைத்துள்ளது சிறப்பு.
இந்நிலையில் இத்தாலியின் வடக்கு பகுதிக்கு செல்லும் ஆல்ப்ஸ் எல்லையில் ஸ்விட்சர்லாந்து எல்லைக்கருகே உள்ள (Stelvio National Park) ஸ்தெல்வியோ தேசிய பூங்காவில், 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் பாறைகள் மீது கண்டறியப்பட்டுள்ளன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இது சமீபமாக அறிவிக்கப்பட்ட மிகப் பெரிய புவியியல் மற்றும் ஐக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
நீண்ட கழுத்துடைய, சிறிய தலைகளையும் கூர்மையான நகங்களையும் கொண்ட தாவர உண்ணிகளான அவை 'ப்ரொசாரோபாட்ஸ்' (Prosauropods)வகையைச் சேர்ந்தவையாக இருக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
விஞ்ஞானிகள் அவற்றை ஆராய முற்பட்ட போது கால்தடங்கள் இருக்கும் பாறைகளை நடந்தே சென்றடைவது கடினமாக இருந்ததால் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. டைனோசரின் 5 கிமீ (3 மைல்கள்) பரப்பளவில் விரிந்துள்ள இத்தகைய பெரும் தடங்கள் European trace fossil உலகிலேயும் மிகவும் பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இந்த தடங்கள் டைனோசர் வாழ்வு முறை, குழு நடத்தைகள் மற்றும் அந்த காலத்திலான சூழல் நிலைகள் பற்றி புதிய அறிவியல் தகவல்களை வழங்கும் என ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.