#JUST IN : தொண்டர்கள் ஷாக்..! விஜய்க்கு மீண்டும் மீண்டும் கட்டுப்பாடு..!

Vijay
Vijay
Updated on

புதுச்சேரியில் விஜய் பிரச்சாரத்திற்கு மீண்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது காவல்துறை.

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் அவர்கள் வரும் 5ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கட்சி சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் நிதி நபின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் 5ஆம் தேதி வரவுள்ளதன் காரணமாக 4ஆம் தேதிக்கு விஜயின் பிரச்சாரத்தை மாற்றிக்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

மேலும் முதலில் விஜய் பிரச்சாரத்திற்கு புதுச்சேரி காவல்துறை நேர கட்டுப்பாடு விதித்தது. அதன் பின் நீக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதேபோல விஜய் செல்லும் நான்கு பகுதிகளில் தலா 1 மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குஷியில் இருந்த தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி தான் சாட்சி - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்..!
Vijay
logo
Kalki Online
kalkionline.com