திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் மாத கட்டண சேவை  தேதி வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் மாத கட்டண சேவை தேதி வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் மாத கட்டண சேவை டிக்கெட்டுகள் மார்ச் 23 தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உலகத்திலேயே அதிக மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்யும் கோவில் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. எப்போதுமே தங்க வைர நகைகளை அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் ஏழுமலையானின் தரிசனம் பெற விரும்பாதவர்கள் உண்டா?

திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற கட்டண சேவைகளில் பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர். அவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளன.

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வரும் ஜூன் மாதம் கட்டண சேவையில் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 23 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ள நிலையில் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி மட்டுமே முன்பதிவு செய்திக்கொள்ள இயலும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதேபோல் ஜூன் மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் ஜூன் மாதத்துக்கான கட்டண சேவை டிக்கெட்டுகள் 24 தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டிக்கெட்டுகள்  www. tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் தேவையான பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், கட்டண சேவை டிக்கெட்டுகள் ஆகியவற்றை முன் பதிவு செய்ய பக்தர்கள் ஆதார் அட்டையை மட்டுமே இனிமேல் பயன்படுத்த முடியும் என்று தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com