திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது.
ஏழுமலையானை தரிசனம் செய்தால் எத்தனை துன்பங்களும் நீங்கி விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருப்பதி சென்று வந்தாலே வாழ்க்கையில் திருப்பம் வரும் என்ற நம்பிக்கையில் தான் தினசரியும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்கின்றனர். விடுமுறை காலமாக இருப்பதால் லட்சக் கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். பல கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்றும் பல மணி நேரம் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
கொரோனாவுக்கு பிறகு தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருவதால் உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1, 200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1, 500 கோடி வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உளுந்தூர் பேட்டையில் காணிக்கையாளர்களின் காணிக்கையில் ரூ. 4.70 கோடியில் வெங்கடாசலபதி கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். மேற்கண்ட விவரங்களை அறங்காவலர் குழு தலைவர் ஒய். வி . சுப்பாரெட்டி தெரிவித்தார்.
தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பத்திரங்களை தவிர, தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள் ரொக்கமாகவும் கோடிக் கணக்கில் காணிக்கை வழங்கி வருகின்றனர். மேலும், இ - உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக் கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.