டைட்டானிக் கப்பல் மூழ்கிய நேரத்தில் நின்ற கடிகாரம்: ஏலத்தில் ரூ.20 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை..!
உலகை அதிரச் செய்த மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றுதான் டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய விபத்து. 1912 ல் இங்கிலாந்தின் சௌத்ஆம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி விபத்தை சந்தித்தது. இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.
இதைப் பற்றி அறியாத அடுத்த தலைமுறையினரும்1997 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் வாயிலாக அறிந்தனர்.
இதற்கிடையே டைட்டானிக் கப்பலில் இருந்து செராமிக் பாத்திரங்கள் (Dishware / China) முதல் தர வர்க்க (First Class), இரண்டாம் தரம் (Second Class), மூன்றாம் தரம் (Third Class) பயணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வண்ண யூனிக் 'Porcelain' (பீங்கான்) மற்றும் எர்த்ன்வேர் (earthenware) பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டது . மேலும் புகைப்படங்கள், சிறிய ஆபரணங்கள் (ஜுவல்லரி) — வைர நகைகள், கடிகாரங்கள், நெக்லெட்கள், மோதிரங்கள் போன்றவைகளும் மீட்கப்பட்டுள்ளதை செய்திகள் வாயிலாக அவ்வப்போது அறிகிறோம்.
டைட்டானிக் கப்பல் ஒரு நினைவுச்சின்னமாக (memorial site) கருதப்படுவதால் அதில் மீட்கப்பட்ட பொருள்கள் அதிக மதிப்பு வாய்ந்தவையாக கருதப்பட்டு பலராலும் விரும்பப்படுகிறது. இதனால் அப்பொருள்கள் ஏலம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் தொழில் ரீதியில் மீட்கலுக்கான உரிமைகள் (salvage rights) முறையாக்கப்பட்ட சில நிறுவனங்களிடம் உள்ளன.
பொதுவாக ஏலத்திற்கு வரும் பொருள்கள் கப்பலின் சிதைவிலிருந்து மீட்கப்பட்டவை, பயணிகளிடம் இருந்தவை அல்லது கப்பலுடன் நேரடியாக தொடர்புடையவை. அதே சமயம் மீட்கப்பட்ட பொருட்கள் சில சேமிப்பகங்களில் (warehouse) வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உண்டு.
டைட்டானிக் கப்பல் (RMS Titanic) மூழ்கிய பிறகு மீட்கப்பட்ட பல வரலாற்றுப் பொருள்கள் உலகம் முழுவதும் ஏலங்களில் விற்கப்பட்டுள்ளன. அவற்றில் Isidor Straus-இன் தங்க பாக்கெட் வாட்ச்,Captain Arthur Rostron-க்கு வழங்கப்பட்ட டைட்டானிக் / Carpathia வாட்ச், John Jacob Astor IV-இன் தங்க வாட்ச் போன்ற வாட்சுகள் அதிக விலை பெற்ற டைட்டானிக் ஏலப் பொருள்கள் வரிசையில் உள்ளது.
இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு தங்க கடிகாரம் இணைகிறது. அந்தக் கப்பலில் பயணித்த அமெரிக்கத் தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ்(Isidor Straus )என்பவரின் தங்க கடிகாரம் இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலம் விடப்பட்டு 1.78 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனையாகி சாதனை படைத்ததுள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 20 கோடியை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப்பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இது 18-காரட் ஜுல்ஸ் ஜுர்ஜென்சன் (Jules Jürgensen) என்ற பிராண்டின் கடிகாரமான இதன் மீது “IS” என்று அவர் பெயரின் இனிஷியல் (initials) பொறிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் உடலிலிருந்து பெறப்பட்ட கடிகாரமான அது டைட்டானிக் கீழே மூழ்கிய நேரத்தை (சுமாரான நேரம்) குறிக்கும் 02:20 AM-இல் நிறுத்தப்பட்டதாக சில செய்திகள் கூறுகின்றன.1912 ஏப்ரல் 14 அன்று டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்கியதில் உயிரிழந்த 1,500 பேரில் இவரும் இவரது மனைவி ஐடாவும் அடங்குகின்றனர்.
இதுவரை ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கப்பல் நினைவுப் பொருள்களில் இது அதிக பட்ச ஏலத்தொகை என கூறப்படுகிறது. கப்பல் விபத்துக்குள்ளான நேரத்தில் நின்ற கடிகாரம் என்ற சிறப்பு பெற்ற இக் கடிகாரத்தின் ஏலத்தொகையுடன் சேர்த்து இதுவரை டைட்டானிக் மூலம் பெற்ற மொத்த தொகை ரூபாய் 35 கோடியைத் தாண்டி விட்டது என்ற தகவலையும் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.

