டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு; அவர் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர்! தமிழக அரசு அறிவிப்பு!

டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு; அவர் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர்! தமிழக அரசு அறிவிப்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

புகழ் பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை தனது இனிய குரலில் பாடி இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். அதோடு சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் 1922ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி மதுரையில் பிறந்தார். இவர் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி தனது 91வது வயதில் இயற்கை எய்தினார்.

நாளை (24.03.2023) அவரது 100வது பிறந்த தினம். இதனை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட முடிவு செய்திருக்கிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டி.எம்.சௌந்தரராஜனின் 100வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் அவர் வசித்து வந்த வீடு அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை ‘டி.எம்.சௌந்தரராஜன் சாலை' என்று பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் பரிந்துரை செய்துள்ளார். பரிந்துரையை பரிசீலித்து, மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்படுகிறது’ என்று அந்த அறிகைக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com