

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், அரசு சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளின் நலன் கருதிப் பல முக்கிய புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
சமூகநீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கான மாத உணவுக் கட்டணம் ரூ.1,400-லிருந்து ரூ.1,800-ஆகவும், கல்லூரி மாணாக்கர்களுக்கான உணவுக் கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த உணவு கட்டண உயர்வுக்காக அரசு சார்பில் கூடுதலாக ரூ.32.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்படும்.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1,238 சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதி ஜன்னல்களில் ரூ.26.85 கோடி செலவில் உயர்தரக் கொசுவலைகள் பொருத்தப்பட உள்ளன.
வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து உயர்கல்வி பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவிகளின் வசதிக்காகச் சென்னையில் புதிய விடுதி ஒன்று தொடங்கப்படவுள்ளது. 100 கல்லூரி மாணவிகள் தங்கும் வகையில், அனைத்து உணவு மற்றும் தங்குமிட வசதிகளுடன் கூடிய இந்தச் சமூகநீதி கல்லூரி மாணவிகள் விடுதி ரூ.54 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் என்று அமைச்சர் சம்பத்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சமூகநீதித் துறைக்கான மானியக் கோரிக்கையில் 67 அறிவிப்புகளை வெளியிட்டார்.
பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1,00,000 ஆக உயர்த்தப்படும்.
மாணவருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி விடுதி மாணவர் உணவுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கல்லூரி மாணவர் உணவுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு 150 சமூக நீதி விடுதிகள் ரூ.160 கோடியில் கட்டப்படும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.
மாணவர்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் ‘பழங்குடியினர் பண்பாட்டு மையம்’ அமைக்கப்படும்.
சமூக நீதி விடுதிகள் பராமரிப்பு, பள்ளி விடுதிகளுக்கு ரூ.75,000 ஆக உயர்வு.
பள்ளி, கல்லூரிகளில் ‘அம்பேத்கர் படிப்பகம்’ ஏற்படுத்தப்படும்.
வீடற்ற பழங்குடியினருக்கு 2,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் "உறையுள்" பழங்குடியினர் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
வீடற்ற ஆதி திராவிடர் குடும்பங்கள், தகுதியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 5,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
ஆதிதிராவிடர் விவசாயிகள் 1000 பேருக்கு 90 சதவீதம் மானியத்துடன் மின் இணைப்பு வழங்கப்படும்.
சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்.
மாணவர் விடுதிகளை பராமரிக்க ‘அரண்’ விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.
பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம்’ திட்டத்தின் மூலம் 2500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.தூய்மைப் பணியாளர்கள்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான, பாதுகாப்பான குடியிருப்பை உறுதி செய்யும் வகையில், வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க "அகம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.
எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும்.
சமூக நீதி விடுதி மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி மற்றும் பயிற்சி பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் விளைபொருட்களின் தனித்தன்மையை பேணிப்பாதுகாக்கும் பொருட்டு புவிசார் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த "பூம்பொழில் தங்கும் வசதிகள்" ஏற்படுத்தப்படும். உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்
பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.
ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்கவும், சமுதாய மக்களின், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக, தனித்துவமான நல அமைப்பாக "சமூக நீதி நல வாரியம்" அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.
இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை ஊடகத் துறையில் ஊக்குவித்து, அவர்களின் திறன்களையும் பங்கேற்பையும் மேம்படுத்தும் வகையில், ஊடகத்துறை படிப்புகளான இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் பயிலும் மாணாக்கருக்கு உட்பயிற்சி (Internship) உதவித்தொகை வழங்கும் "ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் மாணவர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கப்படும்”
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், உரிய வாய்ப்புகளை உருவாக்கவும், வருவாய் ஈட்டவும் கோயம்புத்தூரில் வணிக மையம் கட்டப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.