#BREAKING : சமூக நீதித்துறை சார்பில் 67 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் வன்னி அரசு..!!

தமிழக சட்டசபையில் சமூக நீதித்துறை சார்பில் 67 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார்.
அமைச்சர் வன்னி அரசு |சமூக நீதி
அமைச்சர் வன்னி அரசு |சமூக நீதிimage credit-@ Polimer News
Updated on

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. கடந்த 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை, 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடும் நடைமுறை குறித்து எழுந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் "படம் நன்றாக இருந்தால் மக்கள் பொறுமையாக இருந்து கடைசி வரை கிளைமாக்ஸ் பார்ப்பார்கள்; ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது என்பதால் முன்பே கிளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல் இருக்கிறது" என கிண்டலாகக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் வன்னி அரசு, "இப்போதெல்லாம் படத்திற்கு இரு கிளைமாக்ஸ் இருக்கிறது, அவை படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும்; நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை" என்று சுடச்சுட பதிலளித்து அவையில் விவாதத்தை சுவாரசியமாக்கினார்.

அதனை தொடர்ந்த பேசிய அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதித்துறை சார்பில் 67 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

* தமிழ்நாடு சட்டமன்றத்தில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபைimage credit-@ Polimer News

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.

* மாணாக்கருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை.

* பள்ளி விடுதி மாணாக்கர் உணவுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* கல்லூரி மாணாக்கர் உணவுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கருக்கு 150 சமூக நீதி விடுதிகள் ரூ.160 கோடியில் கட்டப்படும்.

இதையும் படியுங்கள்:
எங்களுக்கும் நக்கல் நையாண்டி தெரியும்... சட்டசபையை சிரிக்க வைத்த முதலமைச்சரின் குட்டிக்கதை..!!
அமைச்சர் வன்னி அரசு |சமூக நீதி

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.

* மாணவர்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை நந்தனத்தில் ‘பழங்குடியினர் பண்பாட்டு மையம்’ அமைக்கப்படும்.

* சமூக நீதி விடுதிகள் பராமரிப்பு, பள்ளி விடுதிகளுக்கு ரூ.75,000 ஆக உயர்வு.

* பள்ளி, கல்லூரிகளில் ‘அம்பேத்கர் படிப்பகம்’ ஏற்படுத்தப்படும்.

* வீடற்ற பழங்குடியின மக்களுக்கு 2000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

* ஆதிதிராவிடர் விவசாயிகள் 1000 பேருக்கு 90 சதவீதம் மானியத்துடன் மின் இணைப்பு வழங்கப்படும்.

* சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்.

* மாணவர் விடுதிகளை பராமரிக்க ‘அரண்’ விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

* பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

* தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம்’ திட்டத்தின் மூலம் 2500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
10 லட்சம் கோடி கடன் சுமையுடன் தொடங்குகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் பயணம்!
அமைச்சர் வன்னி அரசு |சமூக நீதி

* SC/ST தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும்.

* சமூக நீதி விடுதி மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி மற்றும் பயிற்சி பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

* பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.

* ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.

* இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்- வன்னி அரசு

* ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் “ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்” செயல்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..!
அமைச்சர் வன்னி அரசு |சமூக நீதி

இதன் மூலம் மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் அமைச்சர் வன்னி அரசு.

logo
Kalki Online
kalkionline.com