உடனே விண்ணப்பீங்க..! தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலைவாய்ப்பு..! மாதம் ரூ.96,000 சம்பளம்..!

bank jobs
bank jobs
Published on

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TN Cooperative Bank Assistant 2025 முழு அறிவிப்பையும் படித்து கல்வி தகுதி, வயது வரம்பு, பயிற்சி தகுதி மற்றும் பிற தகுதிகளை விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

நிறுவனம் : தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 50

பணியிடம் : தமிழ்நாடு

ஆரம்ப நாள் : 14.12.2025

கடைசி நாள் : 31.12.2025

பதவி: உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.32,020 முதல் Rs.96,210 வரை

காலியிடங்கள்: 50

கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு எந்த ஒரு துறையிலும் பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக B.E, B.Tech (CS/IT/ECE), சட்டப் பட்டம், B.Com, Civil மற்றும் Electrical பொறியியல் பட்டம் பெற்றவர்களும் தகுதியானவர்களாக கருதப்படுவர். மேலும் கூட்டுறவு பயிற்சியை (Cooperative Training) முடித்திருக்க வேண்டும் அல்லது தற்போது அந்தப் பயிற்சியை மேற்கொண்டு கொண்டிருக்க வேண்டும்; மேலும் கணினி பயன்பாட்டில் (Computer Application) அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: SC/ ST/ SC(A)/ BC / BCM / MBC and DNC – குறைந்தபட்ச வயது – 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

பொது பிரிவினர் – 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC, SC(A), ST, DW, PWBD – Rs.250/-

  • BC, BCM, MBC/DC – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு 24.01.2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை நகரில் நடைபெற உள்ளது. தேர்வு பாடத்திட்டத்தில் Co-operative Management, Co-operative Credit & Banking, Accounting, Computer Basics, Mental Ability, Reasoning, Tamil போன்ற பாடங்கள் இடம்பெறுகின்றன.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.12.2025

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tncoopsrb.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.தேவையான ஆவணங்கள், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை சரியான வடிவத்தில் பதிவேற்றுவதும் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதும் அவசியம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 31.12.2025 என்பதால், ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே தயாராகி கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நகை வாங்குவோர் ஷாக்..! ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை..!
bank jobs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com