பறக்கும் படையிடம் பணத்தை இழந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்.. 48 மணிநேரத்தில் மீட்பது எப்படி?

flying squad
flying squadimage source:deccan chronicle
Published on

5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி , தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநிலங்கள் வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தேர்தலில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்குவது குற்றம். மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் செல்வதை தடுக்க,பறக்கும் படை தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுக்க 2,106 பறக்கும் படைகள் மற்றும் 2,106 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 4,200-க்கும் மேற்பட்ட குழுக்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

பறிமுதல் செய்த பணத்தை மீட்பது எப்படி?

​தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி (மார்ச்.21 வரை) மொத்தமாக சிக்கியுள்ள பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ₹75.03 கோடி ஆகும். 

​பறிமுதல் பொருட்களின் விவரங்கள்:

​பணம் ரொக்கமாக: ₹24.87 கோடி

​தங்கம் மற்றும் விலை உயர்ந்த உலோகங்கள்: ₹26.42 கோடி

​மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள்: ₹3.06 கோடி

​இலவசப் பொருட்கள் (குக்கர், வேட்டி, சேலை போன்றவை): ₹20.80 கோடி

மீதமுள்ளவை : மற்ற பொருட்கள்.

பறக்கும் படை தேர்தல் நியாயமான முறையில் நடைபெற சோதனை செய்கிறது. ஆயினும் , கொண்டு செல்லும் பொருட்களுக்கு உரிய ஆவணம் இல்லாமல் அதில் பலரும் சிக்கிக் கொள்கின்றனர். பறக்கும் படையினரால் முதலில் பறிமுதல் செய்யப்பட்டது ஒரு தக்காளி வியாபாரியின் பணம் என்பதை கருத்தில் கொள்க. ஒவ்வொரு தேர்தலிலும் வியாபாரிகள் , விவசாயிகள் , திருமணத்திற்காக பணம் , நகை எடுத்துச் செல்பவர்கள் எல்லாம் இந்த பறக்கும் படையினரால் பணம் பறிமுதலுக்கு ஆளாகி உள்ளனர். ₹50,000 மேல் பணமோ, 10,000 மேல் பரிசுப் பொருட்களோ எடுத்துச் சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்பது எப்படி?

பறக்கும் படையினர் பணம் அல்லது பொருட்களை பறிமுதல் செய்தால் கவலையோ , அச்சமோ கொள்ளத் தேவையில்லை. உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், அவர்கள் திரும்ப பணத்தையும் பொருட்களையும் ஒப்படைத்து விடுவார்கள்.

​மாவட்ட அளவிலான விசாரணை குழு (Grievance Committee):

பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் குழு உள்ளது. இதற்கு இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அல்லது கருவூல அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் இருப்பார்கள்.

அவர்களின் உங்களின் புகாரினை கூறி , பணம் தேர்தல் பட்டுவாடாவிற்காக இல்லை , உங்களின் சுயதேவைக்கு என்று நிரூபித்து , ஆவணங்களை வழங்கினால் , உங்களின் பணமும் பொருட்களும் திரும்ப கிடைக்கும்.

இதற்காக தேவையான ஆதாரங்கள்:

வங்கி பாஸ்புக் , ஏடிஎம் ரசீது அல்லது வங்கியில் இருந்து பணம் எடுத்ததற்கான ஆவணங்கள் , நகை அடகு வைத்து பணம் வாங்கியிருந்தால் அதற்கான அடகு சீட்டு, வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் பணம் பெற்றிருந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டலாம். திருமணத்திற்கான பணம் , நகை என்றால் திருமணப் பத்திரிகை , மருத்துவ தேவைக்கு என்றால் அதற்குரிய மருத்துவமனை ரசீது போன்றவை சமர்பிக்கலாம். விபாபாரி என்றால் பொருட்களை வாங்கிய ரசீதுகள் , ஜிஎஸ்டி ஆவணங்கள் போன்றவற்றை காட்டலாம்.

விசாரணை முறை:

உங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்தப் பணம் எந்த அரசியல் தொடர்பு கொண்டதல்ல, என்று தெரிந்த பின் 24 –48 மணிநேரத்தில் உங்களின் பணமும் பொருட்களும் ஒப்படைக்கப்படும். இவ்வாறு பல லட்சம் மதிப்பிலான பணமும் பொருட்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

வருமான வரித்துறை விசாரணை:

₹10 லட்சத்திற்கு அதிகமான தொகையை உங்களிடம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் , உடனடியாக வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும். நீங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் அளித்து பணத்தை மீட்டுக் கொள்ளலாம்.

எதிலும் சிக்காமல் இருக்க:

வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ₹49,000  மேல் பணமும் , ₹10,000 க்கு மேல் பரிசுப்பொருட்களும் எடுத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள். நாடு டிஜிட்டல் மயமாகி உள்ளத்தால் , எதற்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யுங்கள். வியாபாரிகள் பணத்தினை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள் , பொருட்களுக்கு உரிய ஜிஎஸ்டி ஆவணங்கள் , கொள்முதல் ரசீது ஆகியவற்றை உடன் வைத்திருங்கள். 

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப்பை பயன்படுத்த இனி போன் நம்பர் தேவையில்லை.! புதிய வசதி விரைவில் அறிமுகம்.!
flying squad

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com