#BREAKING : தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்! -அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு..!

TN FINAL VOTER LIST
TN FINAL VOTER LIST image Source:dailythanthi
Published on

வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் கமிஷன் 2025ல் துவக்கியது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடந்தது.

இந்தப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, இறந்தவர்கள், இரட்டை பதிவு, முகவரி மாற்றம் போன்றவை கண்டறியப்பட்டு, அதில் உள்ள பெயர்கள் நீக்கப்பட்டன. அந்த வகையில், மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.தற்போது, 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் உள்ளனர்.இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், கடந்த 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24 லட்சத்த 47 ஆயிரம் பேர் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். அதேபோல், இணையதளம் வழியாக 10 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும்.

ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925,

பெண் வாக்காளர்கள் - 2,89,60,838,

மூன்றாம் பாலினம் - 7,617. பேரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.!
TN FINAL VOTER LIST

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com