#BREAKING : மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.!

SIR
SIR
Published on

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ம்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.

மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல கட்டங்களாக பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பலரும் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். அதன்படி கணக்கிடும் போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் சற்றுமுன் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் மதியம் 2:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி என்கிற SIR பணியினை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதில் இறந்து போன வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் மாறிய வாக்காளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்திருந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் நடந்த இந்தப் பணி, டிசம்பர் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது.

அதன் தொடர்ச்சியாக 19-ந் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 45 ஆயிரம் பேர், மற்றும் இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் மற்றவர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.

தற்போது காஞ்சிபுரம் தூத்துக்குடி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
முடிமாற்று அறுவை சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடுகள்.! தமிழக அரசு அதிரடி.!
SIR

காஞ்சிபுரம்:

ஆண்கள் 5,78,080

பெண்கள் 6,13,917

மூன்றாம் பாலினத்தவர் 197

மொத்தம் 11,92,194

தூத்துக்குடி

ஆண்கள் 6,71,742

பெண்கள் 7,04,689

மூன்றாம் பாலினத்தவர் 193

மொத்தம் 13,76,624

தருமபுரி

ஆண்கள் 6,24,647

பெண்கள் 6,15,311

மூன்றாம் பாலினத்தவர் 150

மொத்தம் 12,40,108

இதையும் படியுங்கள்:
நாட்டின் முதல் குளோனிங் பசுங்கன்று எது தெரியுமா?
SIR

கன்னியாகுமரி மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 15.10 லட்சம்

ஆண் : 7,51,016

பெண் : 7,59,390

3ம் பாலினம் : 144

திருச்சியில் ஆண்கள் 10,31,354 மற்றும் பெண்கள் 10,94,642 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சேலத்தில் ஆண்கள் 13,70,962 மற்றும் பெண்கள் 13,84,548 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.10 லட்சம்

ஆண் : 5,44,035

பெண் : 5,66,526

3ம் பாலினம் : 38

விருதுநகர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 14.97 லட்சம்

ஆண் : 7,28,539

பெண் : 7,68,632

3ம் பாலினம் : 246

செங்கல்பட்டு மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 22.60 லட்சம்

ஆண் : 11,04,511

பெண் : 11,55,144

3ம் பாலினம் : 381

கடலூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 20.15 லட்சம்

ஆண் : 9,91,527

பெண் : 10,23,976

3ம் பாலினம் : 293

சென்னை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 28.30 லட்சம்

ஆண் : 13,65,763

பெண் :14,64,344

3ம் பாலினம் : 829

தஞ்சாவூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 19.51 லட்சம்

ஆண் : 9,47,278

பெண் :10,04,012

3ம் பாலினம் : 155

கோவை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 26.96 லட்சம்

ஆண் : 13,00,889

பெண் :13,95,396

3ம் பாலினம் : 528

மதுரை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 24.66 லட்சம்

ஆண் : 12,08,651

பெண் :12,58,051

3ம் பாலினம் : 252

திருப்பத்தூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 09.11 லட்சம்

ஆண் : 4,49,464

பெண் :4,61,996

3ம் பாலினம் : 139

ராணிப்பேட்டை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 09.44 லட்சம்

ஆண் : 4,61,213

பெண் :4,83,377

3ம் பாலினம் : 111

கிருஷ்ணகிரி மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 15.54 லட்சம்

ஆண் : 7,76,318

பெண் :7,77,458

3ம் பாலினம் : 264

திண்டுக்கல் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 16.72 லட்சம்

ஆண் : 8,12,937

பெண் :8,58,964

3ம் பாலினம் : 174

தென்காசி மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 12.64 லட்சம்

ஆண் : 6,18,063

பெண் :6,46,180

3ம் பாலினம் : 168

திருவள்ளூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 31.57 லட்சம்

ஆண் : 15,44,710

பெண் :16,12,090

3ம் பாலினம் : 613

வேலூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.33 லட்சம்

ஆண் : 5,49,654

பெண் :5,83,769

3ம் பாலினம் : 164

நெல்லை மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 12.53 லட்சம்

ஆண் : 6,11,601

பெண் :6,21,518

3ம் பாலினம் : 145

நாமக்கல் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 13.10 லட்சம்

ஆண் : 6,35,299

பெண் :6,75,452

3ம் பாலினம் : 200

கள்ளக்குறிச்சி மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.09 லட்சம்

ஆண் : 5,52,101

பெண் :5,57,600

3ம் பாலினம் : 210

திருவாரூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் : 11.09 லட்சம்

ஆண் : 4,80,679

பெண் :4,98,919

3ம் பாலினம் : 54

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com