.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நிறுவனம் - தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
வகை - தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் - 1100
பணியிடம் - தமிழ்நாடு
ஆரம்ப நாள் - 21.11.2025
கடைசி நாள் - 11.12.2025
தமிழ்நாடு மருத்துவத்துறையில் 1100 மருத்துவர்களை நியமிக்க தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி: Assistant Surgeon (General)
சம்பளம்: மாதம் Rs.56,100 – 2,05,700/-
காலியிடங்கள்: 1100
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பிரிவின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.இவை பொதுப் பிரிவு - 320, பிசி - 278, பிசிஎம் - 35, எம்பிசி - 212, எஸ்சி - 174, எஸ்சிஏ - 33, எஸ்டி - 48 என நிரப்பப்படுகிறது.
கல்வி தகுதி: MBBS பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் மருத்துவராக பதிவு பெற்றிருக்க வேண்டும். House Surgeon ஆக 12 மாதங்களுக்கு குறையாமல் பணி செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, அதிகபடியான வயது வரம்பு 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 47 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கு 48 வயது வரையும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம் ஆகிய பிரிவினருக்கு அதிகபடியான வயது வரம்பு கிடையாது. அதிகபடியாக அனைத்து பிரிவினரும் 60 வயதை நிறைவு செய்திருக்கக்கூடாது.
விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DAP – Rs.500/-
Others – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
Computer Based Examination
Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். விண்ணங்கள் டிசம்பர் 11 வரை பெறப்படும் நிலையில், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.