சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்படும் தமிழக காவல் துறை! 15 அதிகாரிகளுக்கு தங்க பதக்கத்துடன் விருதுகள்!

2026 சுதந்திர தினம்: 15 தமிழகக் காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு!: 3 பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது!
காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள்
காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

2026 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜே.விஜய் ஆனந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ராமச்சந்திரன் மற்றும் உதவி படைத்தளபதி எஸ்.குமார் ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

சுதந்திர தினத்தை ஒட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புலன் விசாரணையில் மிகச் சிறப்பாக பணியாற்றிய 10 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பணிப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம், ரூபாய் 25,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

தமிழகக் காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள்
தமிழகக் காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள்SOURCE:HINDU

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது என்னவென்றால், புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் / சார்நிலை அலுவலர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

1) சி.ஜெயஸ்ரீ, காவல் துணை கண்காணிப்பாளர், கும்முடிபூண்டி உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்

2) நா.தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர், திருவள்ளூர் உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்

3) கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளர். சைபர் கிரைம் காவல் நிலையம், கோவை மாநகரம்

4) ந.தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை திருச்சி மாநகரம்

5) சே.லதா, காவல் ஆய்வாளர். தனி சிறுவர் காவல் உதவிப் பிரிவு, கோவை மாநகரம்

6) வி.கோமதி, காவல்துறை உதவி தலைவர். நிர்வாகம், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம், சென்னை

7) மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம் பெரம்பலூர் மாவட்டம்

8) ரா.வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலையனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்

9) திருமதி கோ.மகாலட்சுமி, காவல் ஆய்வாளர். மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம், சிவகங்கை மாவட்டம்

10) ச.விஜயகுமார், காவல் துணை ஆணையர். மேற்கு, திருநெல்வேலி மாநகரம்.

அதேபோல் பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகள் / சார்நிலை அலுவலர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள்.

1) வி.சசி மோகன், இ.கா.ப. காவல்துறை துணைத் தலைவர் திண்டுக்கல் சரகம்

2) தெ. சண்முகப்ரியா, இ.கா.ப. காவல் கண்காணிப்பாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம். மேற்கு சரகம், சென்னை

3) சி.எம்.ஆர். மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

4) க.மதன்மோகன், காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை

5) மு.ரவிக்குமார், தலைமை காவல்- 1618, கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்டம்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25,000 ரூபாய் ரொக்க வெகுமதியும் வழங்கப்படும். இந்த விருதுகளை தமிழ்நாடு முதல்வர் பிறிதொரு விழாவில் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! 10,000 வேலைவாய்ப்புகள்! சென்னையில் மாபெரும் ‘Mega Job Fair’..!!
காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள்
logo
Kalki Online
kalkionline.com