காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வராதீர்கள்! தமிழக அரசு விடுத்துள்ள 'ரெட் அலர்ட்'..!

hot sun
hot sun
Published on

தமிழ்நாட்டில் கோடை வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் (IMD) தந்த தகவல் அடிப்படையில் அரசு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயில் அலை (Heat wave) காரணமாக சூரிய வெப்பம் 11 மணி முதல் மதியம் 3 அல்லது 3 :30 மணி மிகவும் அதிகமாக இருக்கும். அந்நேரத்தில் வெளியே வந்தால் உடல் நீர் இழப்பு (Dehydration) வேகமாக நடக்கும். இதனால் சன் ஸ்ட்ரோக் (Heat stroke) போன்ற ஆபத்து அதிகம் என்றும் குறிப்பாக குழந்தைகள், முதியோர், வெளியில் வேலை செய்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

குறிப்பாக இந்த நேரத்தில் தீமை தரும் புற ஊதா கதிர்வீச்சு (UV radiation) அதிகம் என்பதால் வெப்பத்தாக்கம் (Heat stroke) ,நீரிழப்பு (Dehydration) ஆகியவைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் மேலும் இரத்த அழுத்தம் / இதய நோயாளிகளுக்கான(BP / heart patients) ஆபத்து அதிகம் ஏற்படும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

வெயில் அலை (Heat wave) காரணமாக சந்திக்கும் உடல் நல பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் வெப்பத் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு முக்கிய வழிகாட்டுதல்களாக அறிவித்துள்ளது.

நலம் பாதிக்கும் அனல் காற்றைத் தவிர்க்க மக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி (அல்லது 3:30 மணி) வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்கவும், குறிப்பாக குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் பாதுகாப்பு கவசங்களான குடை / தொப்பி, சன்கிளாசஸ் , தண்ணீர் பாட்டில் போன்றவைகளை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். அனலடிக்கும் மதிய நேரத்தில் கடின வேலைகளைத் தவிர்த்து மிதமாக வேலைகளை செய்வது சத்து இழப்பைத் தடுக்கும். மேலும் வெயிலில் இருந்து தப்பிக்க வெளிறிய நிற பருத்தி ஆடைகள் (Light-colored cotton clothes) மற்றும் காலணிகளை அணிய வேண்டும்.

வெளியே செல்வதைத் தவிர்ப்பதுடன் நீர்ச்சத்துடன் இருக்க உதவும் தண்ணீர் , மோர், இளநீர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை போதுமான அளவு அருந்தி தேவைக்கு மட்டும் உணவு உண்டு, உடல் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்துடன் இந்த கோடைகாலத்தை எவ்வித பாதிப்பும் இன்றி கடப்பது நமது கடமை.

மேலும் இயற்கை நிகழ்வான கோடை காலத்தைக் கண்டு பயம் (panic) வேண்டாம். ஆனால் precautions எடுத்தால் உடல்நல பிரச்சினைகள் தவிர்க்கலாம் என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கைகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் மாதங்கள் கடுமையான வெப்பத்தை சந்திக்க வேண்டும் எனும் நிலையில் இப்போது இருந்தே பாதுகாப்புடன் இருப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக..! தனித்து போட்டியிட முடிவு ?
hot sun

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com