தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10,12 வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் எனவும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை செப்டம்பர் 27 ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதில் அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடத்திட்டத்தில் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த தேதிகளில் காலாண்டுத் தேர்வு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
6 முதல் 9-ம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வு அட்டவணை 2025
10-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதி பாடம்
15.09.2025 தமிழ்
17.09.2025 ஆங்கிலம்
18.09.2025 விருப்பமொழி
22.09.2025 கணிதம்
24.09.2025 அறிவியல்
26.09.2025 சமூக அறிவியல்
தேர்வு நேரம் - காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
11-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதி பாடம்
10.09.2025 தமிழ்
11.09.2025 ஆங்கிலம்
15.09.2025 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியில்
17.09.2025 கணினி அறிவியல், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல்
19.09.2025 வேதியியல், கணிக்கியல், புவியியல்
22.09.2025 இயற்பியல், பொருளாதாரம்25.09.2025கணிதம், விலங்கியல், வணிகம்
தேர்வு நேரம் - பிற்பகல் 1.45 முதல் 5 மணி வரை
12-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதி பாடம்
10.09.2025 தமிழ்
11.09.2025 ஆங்கிலம்
15.09.2025 கணிதம், விலங்கியல், வணிகம்
17.09.2025 கணினி அறிவியல், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
19.09.2025 இயற்பியல், பொருளாதாரம்
22.09.2025 உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
25.09.2025 வேதியியல், கணக்கியல், புவியியல்
தேர்வு நேரம் - காலை 9.45 முதல் பிற்பகல் 1 மணி வரை