உங்கள் காரில் இந்த பிரச்சனைகள் இருக்கா? அச்சச்சோ ஆபத்து!

உங்கள் காரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பிரச்னைகள் தெரிந்தால் உடனே காரின் பிரேக்கை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
car Brake failure
car Brake failure
Published on

புதிதாக கார் வாங்குபவர்கள் காரை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் கார் அவர்களுக்கு புதியது என்பதால் ஏதாவது சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அதனை கண்டறிந்து சரிசெய்து கொண்டால் பொது பொருட்செலவில் இருந்தும், விபத்து எனும் ஆபத்தில் இருந்து எளிதாக தப்பித்து விடுபடலாம்.

அந்த வகையில் காரில் உள்ள பாகங்களில் பிரேக் சிஸ்டம் தான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு காரில் உள்ள பிரேக் பாதுகாப்பான ஓட்டுதலை உறுதி செய்வதுடன், ஓட்டுநர் வாகனத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் காரின் மற்ற பாகங்களைப் போலவே, வழக்கமான பராமரிப்பு மற்றும் தேய்ந்த பாகங்களை சரியான நேரத்தில் மாற்றுவது பிரேக்குகளின் சரியான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குறிப்பாக, காரின் பாதுகாப்புக்கும், காரில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பிற்கும் பிரேக் சிஸ்டம் மிக முக்கியமானது. எனவே, காரின் பிரேக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டால் என்னென்ன ஆரம்ப அறிகுறிகள் தென்படும் என்பதை இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
கிளட்ச் & பிரேக்கா? பிரேக் & கிளட்சா? அய்யோ! ரொம்ப குழம்புதே!
car Brake failure

பிரேக் பிரச்சனையின் பொதுவான குறிகாட்டிகளில் ஒன்று, பிரேக்குகளைப் பயன்படுத்தும்போது அசாதாரண சத்தம்/ இரைச்சலான ஒலி வருவதாகும். அதிக ஒலி எழுப்பும் சத்தம் அல்லது அரைக்கும் சத்தத்தை நீங்கள் கேட்டால், உங்கள் பிரேக் பேட்கள் தேய்ந்து போயிருக்கலாம் என்று அர்த்தம் என்பதால், உடனடியாக அதை மாற்ற வேண்டியிருக்கும்.

அதேபோல் கூடுதலாக, காரை நீங்கள் 30,000 முதல் 70,000 மைல்கள் ஓட்டிய பிறகு பிரேக் பேட்களை மாற்ற வேண்டியிருக்கும். இருப்பினும், ஓட்டுநர் நிலப்பரப்பைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.

நீங்கள் கார் ஓட்டும் போது பிரேக் பெடலில் அதிர்வுகள் ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் பிரேக் ரோட்டரில் பிரச்னை இருக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பிரேக் பிடிக்கும்போது க்ரீச், க்ரீச் என்று சப்தம் வந்தாலோ, அல்லது இரு உலோக பட்டைகள் உரசுவது போலவோ சப்தம் வந்தால் பிரேக் பேடுகள் தேய்மானம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை அறிந்தும், உடனே இதனை கவனிக்காமல் விட்டால், காரின் இதர முக்கிய பாகங்களையும் பாதித்து, ரிப்பேர் செலவு உங்களது பாக்கெட்டை காலிசெய்து விடும் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.

அதேபோல் பிரேக் பிடிக்கும்போது காரின் ஒருபக்கம் லேசாக இழுப்பது போன்று உங்களுக்கு தெரிந்தால், பிரேக் பவர் இருபக்கமும் சரியாக வேலை செய்யவில்லை அல்லது ஏதாவது ஒரு பிரேக் லைனிங்கில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அதேநேரம் டயரின் தேய்மானத்தை பொறுத்தும் இதுபோன்று பிரச்சனை எழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால் உடனே ஒரு நல்ல கார் மெக்கானிக்கை பார்ப்பது நல்லது.

பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சிறு சிறு அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம். அதேபோல் தான் காரில் ஹேண்ட்பிரேக் போட்டிருக்கும்போது எச்சரிக்கை விளக்கு எரிவது சகஜம் என்றாலும் அதுவே ஹேண்ட்பிரேக்கை விலக்கிய பின்னரும் தொடர்ந்து அந்த எச்சரிக்கை விளக்கு எரிந்து கொண்டே இருந்தால், பிரேக் சிஸ்டத்தில் பிரச்சனை இருப்பதாக அறிந்து கொள்ளலாம். இது ஒரு சிறிய அறிகுறி தான் ஆனால் இதை நிறையபேர் கவனிக்க தவறிவிடுகின்றனர். இதுவே பின்னாளில் பல ஆபத்துகளும், அதிக செலவும் ஏற்பட காரணமாகிறது.

நீங்கள் காரை ஓட்டும் விதம், சாலைகளில் உள்ள மேடு, பள்ளம் போன்ற தரமற்ற சாலைகளில் பயணிப்பது, உங்கள் காரின் பிரேக் பாகங்கள் தரம் போன்ற காரணங்களாலும் உங்களுடைய காரின் பிரேக்கிங் சிஸ்டத்தில் பிரச்சனைகள் வரலாம்.

பின்வரும் அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலும் உடனடியாக மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையத்திற்கு சென்று காரின் பிரேக் சிஸ்டத்தை சோதனை செய்துவிடுவது நல்லது.

உங்கள் காரின் பிரேக் பெடல் மென்மையாக இல்லாமல் அழுத்துவதற்கு சிரமமாகவும் கடினமாகவும் இருந்தாலும் பிரேக்கில் பிரச்சனை இருப்பதாக உணர்ந்து கொள்ளலாம். அதாவது சில சமயங்களில் நீங்கள் காரில் வேகமாக செல்லும் போது திடீரென பிரேக் பிடிப்பதற்கு பெடலை முழுவதுமாக கடைசி வரை அழுத்த வேண்டியிருக்கும். ஹைட்ராலிக் சிஸ்டத்தில் காற்று கசிவு இருந்தாலும், பிரேக் ஃப்ளூயிட் ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலும், இதுபோன்று பெடலை அழுத்துவதற்கு சிரமமாக இருக்கும். இந்த பிரச்சனைகள் தெரிந்தால் உடனே ஹைட்ராலிக் சிஸ்டத்தில் காற்று கசிவு இருக்கிறதா அல்லது பிரேக் லைனிங் தேய்மானம் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில், பிரேக் பூஸ்டரை மாற்ற வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
காரில் பிரேக் ஃபெயிலியரை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!
car Brake failure

காரில் மற்ற பாகங்களின் பராமரிப்பு பணிகளை விட பிரேக் சிஸ்டத்தை சரியான இடைவெளிகளில் பராமரிப்பது மிகவும் அவசியம் என்பதை மறந்து விடாதீர். அது உங்களது பாதுகாப்பிற்கும், உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்காமலும் தடுக்கும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை பிரேக் லைனிங் உள்ளிட்ட பிரேக் பாகங்களை பரிசோதனை செய்து கொள்வது உங்கள் காரில் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com