

இந்தியாவில் வருமானச் சான்றிதழ் என்பது ஒருவரின் ஆண்டு வருமானத்தை அரசு உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். அதாவது, ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் அனைத்து வருமான ஆதாரங்களிலிருந்தும் (சம்பளம், வாடகை, ஓய்வூதியம், பிற) கணக்கிடப்படும் ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்தும் அரசு ஆவணம் இது. இந்த சான்றிதழ் அரசு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை, மானியங்கள் மற்றும் கடன் போன்றவற்றை பெறுவதற்கு இன்றியமையாதது. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு இது மிகவும் அவசியம்.
இதை ஆன்லைன் மூலமாக (TNeGA) அல்லது தாலுகா அலுவலகம்/VAO அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க சம்பள ரசீது, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல், வயதுச் சான்றிதழ், முகவரிச் சான்று போன்ற ஆவணங்கள் தேவைப்படும். இ-சேவை மையங்களில் இதற்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பித்த பிறகு கிடைக்கும் விண்ணப்ப ஒப்புகை சீட்டை வைத்து வருமானச் சான்றிதழை பெற 10 முதல் 15 நாட்களாகும். இந்த வருமானச் சான்றிதழ் இரண்டு வருட காலத்திற்கு அல்லது கல்விக்காக என்றால் படிப்புக் காலத்திற்கு அது வழங்கப்பட்ட நோக்கங்களுக்காக செல்லுபடியாகும்.
இனிமேல் வருமானச் சான்றிதழை பெறுவதற்கு தாலுகா அலுவலகம்/VAO அல்லது இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து இதற்கு விண்ணப்பித்து 10 நிமிடத்தில் இந்த சான்றிதழை பெற முடியும். வீட்டில் இருந்து வருமான சான்றிதழ் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வருமான சான்றிதழுக்கு வீட்டிலிந்து விண்ணப்பிக்க (TNeGA) https://www.tnesevai.tn.gov.in/citizen/portallogin.aspx என்ற இணையதளத்திற்கு சென்று யாருக்கு இந்த சான்றிதழ் வேண்டுமோ அவரது பெயர், முகவரி கொடுத்து லாகின் செய்தவுடன் வருமான சான்றிதழ் விண்ணப்பம் என்ற பிரிவில் செல்ல வேண்டும். அதன் பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தி பதிவு செய்த பின்னர் 4 நாட்களில் வருமான சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறு மிகவும் எளிய முறையில் வீட்டில் இருந்தே வருமானச் சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக தாலுகா அலுவலகம்/VAO அல்லது இ-சேவை மையங்களுக்கு அலைவேண்டிய அவசியமில்லை.