

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். 1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழகத்தில் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வீடுகள் மற்றும் மனைகளை வழங்குகிறது. இதன் தலைமைக் அலுவலகம் சென்னை சி.ஐ.டி நகரில் உள்ளது. பொருளாதார நிலைக்கேற்ப அனைவருக்கும் வீட்டு வசதியை இது உறுதி செய்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கேற்ற வகையில் (EWS, LIG, MIG, HIG) வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. ஒதுக்கீடு, விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களை அதிகாரப்பூர்வ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணையதளத்தில் பார்க்கலாம்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் புதிய குடியிருப்புகள் மற்றும் மனைகளை விற்பனை செய்வதற்கான புதிய ஆன்லைன் விற்பனை தளத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான நபர்கள் எளிய முறையில் வீடுகள் மற்றும் மனைகளை வாங்க விண்ணப்பிக்கலாம்.
இதற்கிடையே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 6,775 வீடு, மனை அலகுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. குலுக்கல், FCFS மற்றும் Common Pool முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை ஆன்லைன் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனைத் தளத்தை நேற்று (ஆகஸ்ட் 12-ம்தேதி) நாமக்கல் கவிஞர் மாளிகை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்ட அரங்கில் தொடங்கி வைத்தார்கள்.
கடந்த ஆண்டு (2025) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மனைகள் மற்றும் வீடுகள் 2630 அலகுகள் மட்டும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது, இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பல்வேறு திட்டங்களில் விற்பனைக்கு உள்ள 6,775 அலகுகளில்
* வரும் ஆகஸ்ட் 21-ம்தேதி (21.08.2026) முதல் குலுக்கல் முறையில் – 2,842 அலகுகளுக்கும்,
* வரும் ஆகஸ்ட் 24-ம்தேதி (24.08.2026) முதல் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை அடிப்படையில் (FCFS) – இடஒதுக்கீடு விகிதாச்சார முறையில் – 2,184 அலகுகளுக்கும்,
* வரும் ஆகஸ்ட் 25-ம்தேதி (25.08.2026) முதல் பொது ஒதுக்கீடு முறையில் (Common Pool) இட ஒதுக்கீடு விகிதாச்சாரமின்றி, முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை என்ற அடிப்படையில் 1,749 அலகுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* விலை ரூ.3 லட்சம் முதல் ரூ.2.98 கோடி வரை
* பரப்பளவு - 242 முதல் 5,942 சதுரடி வரை
* பிரிவுகள் - HIG | MIG, LIG | EWS
TNHB வீடுகள் தகுதிகள்
* விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், தமிழக வசிப்பிட சான்றிதழ் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரோ அல்லது அவரது நெருங்கிய குடும்பத்தினரோ ஏற்கனவே TNHB-யின் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்) சொத்து எதையும் கொண்டிருக்கக்கூடாது.
* குறைந்த வருமானப் பிரிவு (LIG), நடுத்தர வருமானப் பிரிவு (MIG) மற்றும் உயர் வருமானப் பிரிவு (HIG) ஆகிய வரம்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
* உங்கள் பான் கார்டு, முகவரிச் சான்று, பாஸ்போர்ட் புகைப்படம், வருமானச் சான்றிதழ் மற்றும் வசிப்பிடச் சான்று ஆகியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்கவும்.
இதற்கான tamil Nadu Housing Board Online Portal-ல் விவரங்கங்ள பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய நாளில் இருந்து 7 நாட்கள் கடந்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும், விற்பனைக்கு தயாராக உள்ள 884 வணிக அலகுகள் (கடைகள் / பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள்) e-Tender cum e-Auction முறையில் வரும் ஆகஸ்ட் 25-ம்தேதி முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 24-ம்தேதி வரை மின் ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தளம் Tamil Nadu e-Tenders Portal ஆகும்.
இந்த டிஜிட்டல் தளம், சென்னை, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள சொத்துகளுக்கான விண்ணப்பச் செயல்முறையை வெளிப்படையான டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் எளிதாக்குகிறது.
சென்னை, திருச்சி, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், கோவை, ஓசூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு - https://tnhb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வெளிப்படையான இந்த செயல்பாடு, பொதுமக்களுக்கு வீடு மற்றும் மனைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிப்பதுடன், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படுகின்றது. மேலும் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இவ்வாண்டில் விலை உயர்வு ஏதும் செய்யாமல் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் ஆன்லைன் விற்பனைத் தளம் மூலம் விண்ணப்பித்து (அல்லது) முன்பதிவு செய்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) வீட்டுவசதி சேவையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.