விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் (ம) வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மருத்துவ மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவர், உதவி செவிலியர் மற்றும் நர்சிங் அசிஸ்டன்ட் என மூன்று வகை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனம் : இந்து சமய அறநிலையத் துறை
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : 06
பணியிடம் : தமிழ்நாடு
ஆரம்ப தேதி : 29.10.2025
கடைசி தேதி : 24.11.2025
1. பதவி: மருத்துவர்
சம்பளம்: மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் MBBS பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
2. பதவி: உதவி செவிலியர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் Auxiliary Nurse and Midwife Certificate அல்லது Diploma in Nursing பெற்றவராக இருக்க வேண்டும்.
3. பதவி: நர்சிங் அசிஸ்டன்ட்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் மேல் நிலைப்பள்ளி தேர்ச்சி (HSC) பெற்றவராகவும், Health Worker Certificate பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். மேலும், இந்த வேலைவாய்ப்புகளுக்காக எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://srirangamranganathar.hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604204.