தமிழ்நாடு அரசு வேலை : பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்..!

Government jobs
TN Government
Published on

நிறுவனம் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : விருதுநகர், தமிழ்நாடு

ஆரம்ப தேதி : 19.09.2025

கடைசி தேதி : 29.09.2025

பதவி: சமுதாய வள பயிற்றுநர் (Community Resource Person)

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: பயிற்சி நடத்துவதறஞ் தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது, சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும், கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அ) பகுதி நேரமாகவோ பணிபுரிபராகவோ இருக்கக் கூடாது.விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வள பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது. சுயஉதவிக் குழுவில் குறைந்தப்பட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2025

கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் https://virudhunagar.nic.in/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 17.09.2025 முதல் 25.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

இணைப்பு மாதிரி படிவம் தொடர்புக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண். 04146 2237362. உதவி திட்ட அலுவவர் (CB), தொலைபேசி எண். 9442992115 தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
30 நாட்கள் இதைக் கடைப்பிடியுங்கள் | 90% நோய்களும், உடல் பருமனும் காணாமல் போகும்!
Government jobs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com