

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்குப் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு முறை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, சேலம், திருநெல்வேலி மண்டலங்கள், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1518 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28-ம்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஓராண்டு காலப் பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 12,300 வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
2022, 2023, 2024, 2025 அல்லது மே 2026-இல் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள், ஜூலை 28-ம்தேதி முதல் ஆகஸ்ட் 28-ம்தேதி வரை NATS இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வசிப்பவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 457
Mechanical Engineering / Automobile Engineering – 360
Civil Engineering – 26
Electrical and Electronics Engineering – 41
Computer Science and Engineering / Information Technology – 30
கல்வித் தகுதி: Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering/ Computer Science and Engineering / Information Technology படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 12,300
பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 438
Mechanical Engineering / Automobile Engineering – 338
Civil Engineering – 20
Electrical and Electronics Engineering – 30
Computer Science and Engineering / Information Technology – 53
கல்வித் தகுதி: Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering/ Computer Science and Engineering / Information Technology டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 10,900
பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 623
TNSTC - VILLUPURAM - 100
TNSTC - KUMBAKONAM - 251
TNSTC - MADURAI - 37
TNSTC - TIRUNELVELI - 93
MTC - CHENNAI - 62
SETC - TAMILNADU - 80
மேலே அறிவிக்கப்பட்ட பயிற்சி இடங்களின் எண்ணிக்கையைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அனைத்து TNSTC நிறுவனங்கள், MTC மற்றும் SETC ஆகியவற்றிற்கு உரிமை உண்டு.
கல்வித் தகுதி: B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: ரூ. 12,300
பயிற்சி கால அளவு: 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: இந்த வேலைக்கு பல்கலைக்கழகங்களில் படித்து, டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் உள்ளவர்கள் முதலில் nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வசிப்பவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2026
தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு: செப்டம்பர் 2026-ன் இரண்டாம் வாரம்
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (TNSTC திருச்சி மண்டல அலுவலகத்தில்): செப்டம்பர் நான்காம் வாரம் (தோராயமானது) நடைபெறும்.
குறிப்பு: இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் NATS இணையதள பக்கத்தில் வெளியிடப்படும். அதற்கு NATS இணையதள பக்கத்திற்கு சென்று முகப்புப் பக்கத்தின் அடிப்பகுதியில் இருக்கும் Regional Events → BOAT (Southern Region) என்பதைக் கிளிக் செய்து, Apprenticeship News என்பதைப் பார்க்கவும்.
உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக சமர்ப்பிப்பதற்கு முன், தகுதி, பிரிவு வாரியான காலிப்பணியிடங்கள், தேர்வு செயல்முறை, உதவித்தொகை, முக்கிய தேதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் நேரடி விண்ணப்ப இணைப்பு உள்ளிட்ட முழு விவரங்களையும் சரிபார்க்கவும்.