UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

UPSC Exams.
UPSC Exams.

நீங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவராக இருந்தால் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். UPSC, CSE Prelims 2024-ற்கான விண்ணபிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் தங்கள் படிவங்களை ஆணையத்தின் இணையதளத்தில் சமர்பிக்கவும்.

இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 1052 காலியிடங்களை ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் சென்ற ஆண்டைவிட இது குறைவாகவே கருதப்படுகிறது. ஏனெனில் சென்ற ஆண்டு 1105 காலியிடங்கள் இருந்தன. அதேபோல் 2021ம் ஆண்டில் 712 காலியிடங்களும் 2020ம் ஆண்டில் 796 காலியிடங்களும் இருந்தன.

விண்ணப்பதாரர் 21 வயதை அடைந்திருக்க வேண்டும். அதேபோல் ஆகஸ்ட் 1, 2024 அன்று 32 வயதை அடைந்திருக்கக்கூடாது. அதாவது விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 1992ம் ஆண்டிற்கு முன்னதாகவும் ஆகஸ்ட் 2003ம் ஆண்டிற்குப் பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.

UPSC தேர்வின் விதிப்படி ஏதேனும் ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 அல்லது UPSC CSE 2024 தேர்வின்படித் தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வுகள் மூன்று நிலை தேர்வுகளைக் கொண்டிருக்கும். அதாவது முதற்கட்ட தேர்வு, முதன்மை மற்றும் ஆளுமை தேர்வு ஆகும். இதில் முதற்கட்ட தேர்வுப் புறநிலை வகை கேள்விகளைக் கொண்டிருக்கும். அந்தத் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்குத் தகுதிப் பெறுவார்கள். இதற்கிடையே CSE முதன்மைத் தேர்வைத் தொடர்ந்து பல்வேறுச் சேவைகள் மற்றும் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல்கள் நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
காசா போரில் இந்தியர் ஒருவர் மரணம்.. மேலும் இரண்டு இந்தியர்கள் படுகாயம்!
UPSC Exams.

இந்தநிலையில் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இன்று வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் upsconline.nic.in-ல் பதிவு செய்யவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com