இஸ்ரேல் காசா போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு!

Isreal Lebanon war
Isreal Lebanon war
Published on

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் இஸ்ரேல் காசா போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி போரை எதிர்த்து உலகம் முழுவதும் பேரணி நடத்தப்பட்டது.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருக்கிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில்தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. 

ஏறதாழ 42 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் இந்தப் போரில் உயிரிழந்துள்ளனர். மேலும் காசாவில் ஏறக்குறைய 2.3 மில்லியன் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். இதனால், காசாவில் பசி பட்டினி சுகாதாரமின்மை போன்றவற்றால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை உலகம் முழுவதும் பல இடங்களில் போரை நிறுத்தக்கோரி  பேரணிகள் நடத்தப்பட்டன. சுமார் 40 ஆயிரம் பேர் மத்திய லண்டன் வழியாக அணிவகுத்துச் சென்றனர். பாரீஸ், ரோம், மணிலா, கேப் டவுன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதுபோல பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதையும் படியுங்கள்:
News 5 – (07.10.2024) விமான சாகசம்: சாதனை நிகழ்வு வேதனை நிகழ்வாக மாறிய சோகம்!
Isreal Lebanon war

ஆனால், அவற்றை இஸ்ரேல், ஹமாஸ் தரப்பினர் சிறிதும் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை . ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபாவில் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு இரண்டு ஏவுகணைகள் வெடித்துச் சிதறின என்றும். 65கிமீ தூரத்தில் உள்ள திபேரியாஸ் பகுதியை 5 ஏவுகணைகள் தாக்கின என்றும் இஸ்ரேல் கூறியது. இதனால், சில கட்டடங்கள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கிடங்கை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஓராண்டு முடிந்ததும் இன்னும் போர் முடிவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாதது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com