நகை வாங்குவோர் ஷாக்..!! ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை..!!

Gold price hike
Gold rate
Updated on

தங்கம் விலை இனிமேல் ஏறுமுகத்தில் தான் இருக்கப்போகிறது. சாமானியர்களுக்கு தங்கம் என்பது வெறும் கனவு என்ற நிலை தான் இருந்தது. ஆனால் அதனை அமெரிக்கா - ஈரான் போர் மாற்றியமைத்தது. மடமடவென சரிந்த விலையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்தாலும், தங்கத்தின் மீதான ஈடுபாடு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, கடந்த ஆண்டில் கடும் விலையேற்றம் இருந்தபோது கூட தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டிவந்தவர்கள், இப்போது வாங்கலாமா அல்லது வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே இருப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே அதிக தங்கம் நுகர்வோர் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இருப்பினும், நமது நாட்டில் பயன்படுத்துகிற தங்கத்தில் பெரும்பான்மை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கணிசமாக உயர்த்தியதால், தங்கம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது நமது நாட்டில் நகைக்கடைகள் இழப்பை சந்தித்து வருகின்றன. உலகளவில் தங்கத்தின் விலை குறைந்த போதிலும் நகை வாடிக்கையாளர்களும், முதலீட்டாளர்களும் தங்கத்தை வாங்குவது குறித்தும், அதன் மீது முதலீடு செய்வது குறித்தும் குழப்பத்தில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Gold jewellery
Gold jewellery

ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில், பிற்பகலில் ரூ.960 உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.காலையில் ஒரு சவரன் ரூ.106,880க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் ரூ.960 உயர்ந்து ரூ.107,840க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் காலையில், ரூ.13,360க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் ரூ.120 உயர்ந்து ரூ.13,480க்கு விற்கப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை நேற்று (ஆகஸ்ட் 4) கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 13,200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ரூ. 160 உயர்ந்து, ரூ. 13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலை மீண்டும் ரூ. 120 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,05,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ரூ. 1,280 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,06,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாலை மீண்டும் ரூ. 960 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,07,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,240 அதிகரித்திருக்கிறது.

வெள்ளி விலை

தொடர்ந்து 8 நாட்களாக தங்கம் விலை எந்தவித மாற்றமுன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 5 அதிகரித்திருக்கிறது. அதன்படி இன்று ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ ரூ. 2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்று கிராம் ரூ.240க்கும் ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்கப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

  • ஆகஸ்ட் 4: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

  • ஆகஸ்ட் 3: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000

  • ஆகஸ்ட் 2: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

  • ஆகஸ்ட் 1: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

  • ஜூலை 31: 1 கிராம் - ரூ.13,255 1 சவரன் ரூ.1,06,040

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

  • ஆகஸ்ட் 4: 1 கிராம் - ரூ.235

  • ஆகஸ்ட் 3: 1 கிராம் - ரூ.235

  • ஆகஸ்ட் 2: 1 கிராம் - ரூ.235

  • ஆகஸ்ட் 1: 1 கிராம் - ரூ.235

  • ஜூலை 31: 1 கிராம் - ரூ.235

இதையும் படியுங்கள்:
கஜினி வில்லன் பிரதீப் ராவத் காலமானார்: திரையுலகில் சோகம்!
Gold price hike
logo
Kalki Online
kalkionline.com