நகை வாங்குவோர் ஷாக்..! ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்த தங்கம் விலை..!

மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- இல்லத்தரசிகள் அதிர்ச்சி...
Gold price
Gold price
Updated on

மற்ற நாடுகளில் தங்கம் பொறுத்தவரை ஒரு முதலீடாக இருக்கிறது. ஆனால் நமது நாட்டில் உணர்ச்சிகளோடு கலந்திருக்கிற ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது.இங்கு திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனாலேயே உலகளவில் அதிக தங்கம் வாங்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

தங்கம் விலை கடந்தாண்டு அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இவ்வளவு குறையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.ஒரு நாள் தங்கம் விலை குறைந்தால் அடுத்த இரண்டு நாட்களில் அதை விட அதிமாக ஏறிவிடும். கடந்த இரண்டு வருடங்களில் நகை விலை ஏற்ற, இறக்கம் இப்படி தான் இருந்தது. ஆனால் அமெரிக்கா - ஈரான் போருக்கு பிறகு அந்த நிலைமை தலைகீழாக மாறி இருந்தது.இதற்கு காரணம் டாலர் மதிப்பு நல்ல நிலைமையில் இருப்பது தான். பொதுவாக டாலர் மதிப்பு சரியும் போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். அதுவே, டாலர் மதிப்பு கூடும்போது, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறும் நோக்கில், டாலர்களில் முதலீடு செய்வர்.

தொடர்ந்து 6 மாதங்களாக சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தாறுமாறாக ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. தற்போது உயர்ந்து வரும் தங்கம் விலை நகை வாடிக்கையாளர்களை சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால் விநாயகர் சதுர்த்தி தொடங்கி தீபாவளி வரை அடுத்தடுத்த பண்டிகைகள் வருவதால் இனிவரும் நாட்களில் தங்கம் விலை உயரத் தான் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.

நேற்று (ஆகஸ்ட் 20) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.

இதனை தொடர்ந்து இன்று காலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold shopping
gold shoppingAI Image

இந்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

  • ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800

  • ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.14,400 1 சவரன் ரூ.1,15,200

  • ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.14,290 1 சவரன் ரூ.1,14,320

  • ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.14,270 1 சவரன் ரூ.1,14,160

  • ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

  • ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.260

  • ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.250

  • ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.255

  • ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.255

  • ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.255

logo
Kalki Online
kalkionline.com