
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இன்று மற்றும் நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறியப்பட்டது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவலாஞ்சி, பைன் மரக்காடு, 8வது மைல்கல், மரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.