கோடை விடுமுறை முடிந்தும், கன்னியாகுமரியில் அலைமோதும் கூட்டம்!

kanyakumari
Kanyakumariimage credit: wikipedia

மக்கள் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் கோடை விடுமுறையை சந்தோஷமாக அனுபவிக்க, வருடந்தோறும் மக்கள் கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத்தலங்கள் சென்று வருவது வழக்கமான ஒரு நிகழ்வு.

கன்னியாகுமாரி அதிக மக்கள் சென்று வரும் ஒரு பொது இடமாக திகழ்ந்து வருகிறது. அதிலும் ஏப்ரல், மே போன்ற கோடை விடுமுறை காலங்களில் அங்கு மக்களின் கூட்டம் பார்க்கும் இடங்களில் எல்லாம் அலைமோதும். அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய மூன்று முக்கிய கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இந்த வருடமும் மக்களின் வருகை சற்று அதிகமாகவே இருந்துள்ளது.

கன்னியாகுமரியில் காலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரிய அஸ்தமனம் வெகு விமர்சையாக பார்க்கப்படும் ஒன்று. கடலோடு சூரியன் உதயமாகும் காட்சியை காண மக்கள் அதிகாலையிலே சென்று அங்கு அமர்ந்துவிடுவர். அதோடு படகில் சென்று விவேகானந்தரின் சிலையை தரிசித்து வருவதும் மக்களுக்கு அங்கு பிடித்தமானதாக அமைந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஆஃப்கானிஸ்தானில் நிலநடுக்கம்… மக்களின் கதி என்ன?
kanyakumari

கோடை விடுமுறை காலங்களில் தான் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பயணிகள் சுற்றுலா செல்வார்கள். பள்ளிகள் திறந்தவுடன் மக்களின் வருகை அப்படியே குறைந்து விடும். நேற்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கன்னியாகுமரியில் மட்டும் அதிகமான மக்கள் திரண்டுள்ளது வியக்கத்தக்கதே!

இந்த ஆண்டு கோடை விடுமுறை மாதங்களில் கன்னியாகுமரிக்கு 10 லட்சம் மக்கள் வருகை தந்துள்ளனர். அதில் கோடை விடுமுறை  முடிந்த இந்த சமயத்தில் நேற்று மட்டும் சுமார் 6000 பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com