சாண்ட்விச் போல 3 மசோதாக்களை ஒன்றாக கொண்டு வந்துள்ளது மத்திய அரசு - டி.ஆர்.பாலு..!

டி.ஆர்.பாலு - கனிமொழி
டி.ஆர்.பாலு - கனிமொழி
Updated on

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கிறோம் என்றும், சாண்ட்விச் போல 3 மசோதாக்களை ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு என்றும் மக்களவையில் டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாக்களைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசுக்கு திமுக மக்களவை குழுத் தலைவர் டி ஆர் பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

3 மசோதாக்களை சாண்ட்விச் போல ஒன்றாக இணைத்து கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த நடவடிக்கை தென்னிந்திய மாநிலங்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் முயற்சியாகும். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் ஒடுக்கப்படும். 

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், இந்த மசோதாவை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி செயலி அறிமுகம்..!
டி.ஆர்.பாலு - கனிமொழி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com