பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி போக்குவரத்து மாற்றம்!

பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி போக்குவரத்து மாற்றம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னை கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 16-ந்தேதி வரை 4 நாட்களுக்கு ஆலந்தூர் பிரதான சாலையில் தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப் பட உள்ளது . இது தொடர்பான பணி, பொது பணித்துறையினரால் சைதாப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனத்திற்கு இடையில் ஆலந்தூர் பிரதான சாலையில் நடந்து வருகிறது. இதனால், இன்று முதல் 16-ந்தேதி வரை 4 நாட்களுக்கு ஆலந்தூர் பிரதான சாலை தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து
போக்குவரத்து

கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து ஆலந்தூர் சாலை மற்றும் ஆலந்தூர் ஆடு தொட்டி பாலம் கடந்து பட்டாபிராம் செல்லும் 70 எப் மாநகர பேருந்து மற்றும் அசோக்நகர் வழியாக டிபன்ஸ் காலனி செல்லும் மினி மாநகர சிற்றுந்து எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இடது புறமாக திரும்பி வாட்டர் டேங்க் ரோடு ரவுண்டானா சென்று இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை சிப்பட் சந்திப்பு வழியாக செல்லலாம்.

அண்ணாசாலையில் இருந்து கிண்டி திரு.வி.க. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆலந்தூர் பிரதான சாலை வழியாக ஆலந்தூர் ஆடுதொட்டி பாலம் கடந்து சைதாப்பேட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்தில் இருந்து வலது புறம் திரும்பி அண்ணா சாலை வழியாக சைதாப்பேட்டையை சென்றடையலாம்.

சைதாப்பேட்டை பஜார் ரோட்டிலிருந்து ஆலந்தூர் ஆடுதொட்டி பாலம் வழியாக கிண்டி திரு.வி.க. எஸ்டேட் செல்லும் வாகனங்கள் சைதாப்பேட்டை ஆலந்தூர் மெயின்ரோடு ஐந்துலைட் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி மசூதி தெரு வழியாக மாந்தோப்பு பள்ளி சந்திப்பு சென்று கோடம்பாக்கம் சாலை வழியாக கோவிந்தன் ரோடு - அசோக்நகர் 11-வது அவென்யூ, 100 அடி சாலை மற்றும் காசிபாலம் வழியாக சென்று சிப்பட் சந்திப்பில் இடது புறம் திரும்பி வாட்டர் டேங்க் சாலை வழியாக கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் அடையலாம்.

அண்ணாசாலை கிண்டி மார்க்கத்திலிருந்து திரு.வி.க. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் செல்லும் வாகனங்கள் கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இடது புறமாக திரும்பி வாட்டர் டேங்க் சாலை ரவுண்டானா சென்று தாங்கள் செல்லும் இலக்கை அடையலாம்.

சைதாப்பேட்டை பஜார் ரோட்டிலிருந்து கிண்டி செல்லும் வாகனங்கள் பஜார் ரோட்டிலிருந்து ஐந்து லைட் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி மசூதி தெரு வழியாக மாந்தோப்பு பள்ளி சந்திப்பு சென்று வலதுபுறமாக திரும்பி கிழக்கு ஜோண்ஸ் சாலை பவள வண்ணன் சுரங்கப்பாதையை அடைந்து அண்ணா சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

logo
Kalki Online
kalkionline.com