நோட் பண்ணுங்க மக்களே..! சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

traffic change in chennai
traffic change in chennai
Published on

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

15.08.2025 அன்று தலைமைச் செயலகத்தில் உள்ள செயிண்ட் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 15.08.2025 அன்று காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.

1. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வரையிலான சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்ல நடை விதிக்கப்படும்.

2. காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் வாயா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையில் இணைந்து மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எப்.எஸ் (NFS) சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம். அதேபோல், அண்ணா சாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கி வரும் வாகனங்கள் மேலே உள்ள அதே பாதையை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
சிபில் ஸ்கோர் குறைவது எப்படி? குறைந்த ஸ்கோரை உயர்த்துவது எப்படி?
traffic change in chennai

3. ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிஸ் ர்னர் என்எல்எஸ் சாலை, இராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம் அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணண சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கி சென்று காமராஜர் சாலையை அடையலாம்.

4. சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள் காலை 8.30 மணிக்கு முன் சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்களுடன் வரும் வாகனங்கள், ராஜாலி சாலையில் சென்று தலைமைச் செயலக நாலைமைச் செயலகத்திற்குள் நிறுத்த அனுமதிக்கப்படும். காலை 8.30 மணிக்குப் பிறகு வரும் அழைப்பாளர் வாகனங்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலைஅண்ணா சிலை அண்ச வாலா பாயிண்ட். முத்துசாமி பாயிண்ட் I அண்ணாமலை மன்றம். என்டா சாலைபாரிஸ் கார்னர் மற்றும் ஆர்பிஐ (RBI) சரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டு, தலைமைச் செயலக வெளிவாயில் முன் விருந்தினர் இறங்கிய பின் பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.

5. காமராஜர் சாலையில் வரும் அழைப்பாளர்கள் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள் போர் நினைவுச்சின்னம். கொடி மரச்சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி சாலை NFS பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலகத்தின் வெளிப்புற வாயிலை அடைய வேண்டும். அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சிலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வழியாகச் சென்று தலைமைச் செயலக வெளிவாயிலில் இறங்க வேண்டும். நீகம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட அணைத்து வாகணங்களும் தலைலமச் செயலகத்திற்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com