வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்..!

traffic change in chennai
traffic change in chennai
Published on

விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 27 ம் தேதி நாடு முழுவதும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது.விநாயகர் பிறந்தநாளாக கருதப்படும் சுக்கில சதுர்த்தி தினத்தை, வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். 16ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜி, விநாயகர் சதுர்த்தியைப் பிரபலமாக்கினார். அவரின் குல தெய்வமான கணபதிக்கு அனைவரும் விழா எடுக்க இவ்வாறு செய்தார்.

மராட்டிய ஆட்சியிலிருந்த பேஷ்வாக்கள் இதற்கு ஊக்கம் அளித்தனர். மராட்டிய ஆட்சி முடிவுக்கு வரும் வரை விநாயகர் சதுர்த்தி பிரபலமாக இருந்தது. அதன்பின், மும்பையில் மீண்டும் விநாயகர் சதுர்த்தியைப் பிரபலப்படுத்தியவர், பாலகங்காதர திலகர் ஆவார். 1893ஆம் ஆண்டு முதல் பேஷ்வாக்கள் குடும்ப விழாவாக இருந்த விநாயகர் சதுர்த்தியை பொதுவான விழாவாக மாற்றியவர், பாலகங்காதர திலகர். 1990-களுக்குப் பின்பே விநாயகர் சதுர்த்தி உழைக்கும் மக்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அனைவரும் கொண்டாடப்படக் கூடிய நிகழ்வாக மாறியது.அப்படிப்பட்ட பெருவிழாவாக விநாயக சதுர்த்தி நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்நிலையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ராதா அஷ்டமி: செல்வமும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் பெற இதைச் செய்யுங்கள்!
traffic change in chennai

அதன் விவரம் வருமாறு:-

* திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு-காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.

* விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com