வாகன ஒட்டிகளே கவனம்..! நாளை முதல் சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

traffic change in chennai
traffic change in chennai
Published on

போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, நாளை ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

* அண்ணா சாலையில் உள்ள சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு, விஜயராகவ சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.

* அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம்.

இதையும் படியுங்கள்:
1200 வருட பழைமையான கோயில்: 38 சாளக்ராமங்களை அணிந்த அபூர்வ லக்ஷ்மி நரசிம்மர்!
traffic change in chennai

* தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.

* அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது.

வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com