உத்தரபிரதேசத்தில் ரயில் விபத்து… 4 பயணிகள் உயிரிழப்பு!

Train Accident
Train Accident
Published on

உத்தரபிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

ரயில் விபத்தோ அல்லது விமான விபத்துக்களோ எற்பட்டால், அது பெரிய அளவு சேதத்தை ஏற்படுத்தும். சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸ், உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. சரியாக இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பயணிகள் பயணிக்கும் இந்த ரயிலில் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் விபத்துக்குள்ளானது. இதில் 4 ஏசி பெட்டிகளும் அடங்கும்.

சம்பவம் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து அந்த இடத்திற்கு வந்தனர். பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பயணிகள் படுகாயமடைந்தனர்.

இது குறித்து அம்மாநிலத்தின் துணை முதல்வர் பிரஜேஷ் கூறுகையில், "சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 4 பேர் உயிரிழந்ததாக பதிவாகி இருக்கிறது. மற்றவர்கள் நலமாக உள்ளனர். ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தன. மீட்புப் பணியில் உள்ளூர் மக்கள் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்." என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல முதல்வர் யோகி ஆதித்யநாத், "கோண்டா மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பள்ளிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! தொடரும் கொடூரம்!
Train Accident

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரயில்வே பாதுகாப்பு ஆணையம் மற்றும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com