இனி ரயில் தாமதமானால் 100% கட்டணம் திரும்பப் பெறலாம்.!! இதை பெறுவது எப்படி..?

train
Train
Published on

நாம் பயணம் செய்ய இருக்கும் ரயில் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டாலோ, வேறு காரணங்களுக்காக நமது பயணம் 3 மணி நேரத்திற்கு முன்பு இரத்து செய்யப்பட்டாலோ, நாம் நமது பயணச்ச் சீட்டை ரத்து செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறான நேரங்களில் நமது பயணச்சீட்டின் முழுப் பணத்தையும் (100%) திரும்பப் பெற நமக்கு உரிமை உண்டு.

இந்தியாவில் ரயில் பயணங்கள் மிகவும் மலிவான செலவில் சாமான்ய மக்களுக்கும் சாத்தியமாகியுள்ளன. அதனால் கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் ரயிலில் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால்,குளிர்காலத்தில், மோசமான வானிலையின் காரணமாக சில சமயங்களில் ரயில்கள் தாமதமாக வருகின்றன. இது பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

அவ்வாறான நேரங்களில் நாம் பயணிக்க விரும்பாமல் ,பயணச்சீட்டை ரத்து செய்வோம்.அவ்வாறான தருணங்களில் நாம் பயணச்சீட்டின் முழுக்கட்டணத்தையும் திரும்பப் பெற உரிமை உள்ளவர்கள் ஆவர்.இந்த முக்கியமான விதியை அனைத்துப் பயணிகளும் அறிந்திருப்பது நல்லது.அவ்வாறான நேரங்களில் நமது பயணச்சீட்டை ரத்துசெய்து டிக்கெட் டெபாசிட் ரசீதினை இரயில்வேத் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்திய ரயில்வே விதிகளின்படி, நமது ரயில் மூன்று மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாகி, நாம் நமது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் பயணச் சீட்டின் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். இந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு நாம் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் நமது பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டும்.ரயில் 3 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமான காரணத்திற்காக மட்டுமே இதை செய்ய முடியும்.இதற்காக ரயில்வேத்துறை எந்தவிதக் கட்டணத்தையும் வசூலிக்காது. நமது பயன்படுத்தாத இரயில் பயணச்சீட்டின் முழுத் தொகையும் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இருப்பினும், இந்தத் தொகையை திரும்பப் பெற ஒரு வாரகாலம் ஆகலாம்.

பொதுவாக, ரயில்வேயின் வழக்கமான ஆன்லைன் ரத்து செய்தல் கால அவகாசம் முடிந்த பிறகு, அல்லது சில குறிப்பிட்ட காரணங்களுக்காக நாம் பயணிக்காதபோது பணத்தைத் திரும்பப் பெற TDR பயன்படுத்தப்படுகிறது. AC வேலை செய்யாமல் போனால் அல்லது முன்பதிவு செய்த வகுப்பை விடக் கீழ் வகுப்பில் நாம் பயணித்தால் (பண வேறுபாட்டைக் கோர). ரயில் பாதை மாற்றப்பட்டு (Diverted) நமது போர்டிங் நிலையம் அல்லது சேருமிடத்தை அடையவில்லை என்றால் இச்சலுகையை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்கு IRCTC இணையதளம்/ மொபைல் செயலியில் நமது பயணச்சீட்டின் PNR எண்ணைப் பயன்படுத்தி TDR-ஐ ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும்.ஆனால் நாம் பயணிக்காததற்கான சரியான காரணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். TDR தாக்கல் செய்த பிறகு, ரயில்வே நமது கோரிக்கையை ஆய்வு செய்து நடப்பில் உள்ள விதிகளின்படி பணத்தைத் நம வங்கிக் கணக்கிற்கு திரும்ப அனுப்பி விடும். மேலும் இது சார்ந்த நமது ஐயங்களுக்கு தீர்வுகாண இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளத்தை அணுகலாம்.

இதையும் படியுங்கள்:
இதய நோய் ஆபத்தை முன்கூட்டியே கண்டறிய புதிய வழி..!!
train

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com