இதய நோய் ஆபத்தை முன்கூட்டியே கண்டறிய புதிய வழி..!!

Waist-to-height ratio chart with a woman in athletic wear.
Waist-to-height ratio for health risk assessment.
Published on

இதய நோய் (Cardiovascular Disease) பற்றிய பேச்சே இப்போதெல்லாம் ரொம்ப அதிகமாயிடுச்சு! இது ஒரு பெரிய உலகளாவிய ஆபத்துன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த ஆபத்து நம்மள அண்டாம இருக்கணும்னா, அதை முன்கூட்டியே கண்டறிவது ரொம்ப அவசியம்.

 இதய நோய் ஆபத்தும்... BMI-ன் பங்களிப்பும்!

நம்ம உடல் பருமனா இருக்கிறோமான்னு தெரிஞ்சுக்க நாம இதுவரைக்கும் நம்பியிருந்த ஒரு முக்கியமான அளவுகோல் என்னன்னா, அதுதாங்க உடல் நிறை குறியீடு (Body Mass Index - BMI).

நம்மளோட எடைக்கும் (Weight) உயரத்துக்கும் (Height) உள்ள விகிதத்தை வெச்சு, நாம ஆரோக்கியமான எடைப் பிரிவில் இருக்கோமா, அதிக எடையில இருக்கோமா, இல்லன்னா உடல் பருமன் (Obesity) பிரிவில் இருக்கோமான்னு சொல்லிடும்.

உடல் பருமன் அதிகரிக்கும்போது, இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல சிக்கல்கள் வரும்னு BMI ஒரு நல்ல ஆரம்ப எச்சரிக்கையை நமக்குக் கொடுத்துச்சு.

BMI Vs. இடுப்பு-உயர விகிதம்: புதிய ஆய்வு சொல்லும் மாற்றங்கள்

ஆனா இப்போ, ஒரு புதிய ஆய்வு, நாம இதய நோய் ஆபத்தை அளக்குற முறையை மாத்தணும்னு சொல்லுது.

BMI நல்லா வேலை செஞ்சாலும், அதுல ஒரு சின்னப் பிரச்சனை இருக்கு. அதாவது, ஒருத்தரோட உடல் பருமன் எங்கே இருக்குன்னு அது சொல்லாது.

கொழுப்பு உடலின் மையப் பகுதியில (அதாவது இடுப்பைச் சுற்றி) அதிகமா சேர்றதுதான் இதயத்துக்கு ரொம்ப ஆபத்து.

ஆனா, BMI உள் உறுப்புகளில் இருக்கும் கொழுப்பையும் தோலுக்குக் கீழே இருக்கும் கொழுப்பையும் பிரித்துப் பார்ப்பதில்லை.

அதனாலதான், இந்தப் புதிய ஆய்வு இடுப்பு-உயர விகிதத்தை (Waist-to-Height Ratio - WHtR) முன்வைக்குது.

இடுப்புச் சுற்றளவை உயரத்தால் வகுப்பதன் மூலம் இது கணக்கிடப்படுது. ஆய்வாளர்கள் பல வருஷங்களா 2,721 பெரியவர்களைக் கண்காணிச்சு, அவங்க கிட்ட இருந்த வயது, பாலினம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற மற்ற எல்லா ஆபத்துக் காரணிகளையும் கணக்கில் எடுத்துச் சரிசெய்து பார்த்த போது, ஒரு ஆச்சரியமான உண்மை தெரிஞ்சுது:

BMI தனிப்பட்ட விதத்தில் இதய நோய் அபாயத்தை நம்பகமா கணிக்கல. ஆனா, WHtR மட்டுமே, எல்லாக் காரணிகளையும் சரிசெய்த பிறகும், இதய நோய் அபாயத்தை மிகவும் நம்பகமாக முன்கூட்டியே கணித்தது.

⚠️ WHtR 0.5-ஐ விட அதிகம் இருந்தால் எச்சரிக்கை!

இந்தக் கண்டுபிடிப்புல ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, BMI 30-க்குக் குறைவா இருக்கிறவங்க, அதாவது "உடல் பருமன் இல்லை"ன்னு நாம நினைக்கிறவங்க மத்தியிலதான், இந்த WHtR ரொம்பச் சக்தி வாய்ந்ததா இருக்கு.

அதாவது, ஒருத்தரோட மொத்த BMI சாதாரணமாக இருந்தாலும், அவரோட இடுப்புச் சுற்றளவு உயரத்தோட ஒப்பிடும்போது அதிகமா இருந்தால் (WHtR 0.5-ஐ விட அதிகம் இருந்தால்), அவருக்கு எதிர்காலத்தில் கரோனரி தமனி கால்சிஃபிகேஷன் (இதய நோய் ஆபத்தின் முக்கிய அறிகுறி) வர அதிக வாய்ப்பு இருக்குன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க.

இதையும் படியுங்கள்:
காது கேட்பதில் சிக்கலா? உடனே கவனியுங்கள்... உங்கள் இதயம் பத்திரம்!
Waist-to-height ratio chart with a woman in athletic wear.

பிட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சொல்றது இதுதான்:

"ஒரு நோயாளிக்கு எடை, கொழுப்பு, இரத்த அழுத்தம் எல்லாமே சாதாரணமாக இருந்தாலும் கூட, WHtR-ஐ பயன்படுத்தி அவங்களுக்கு இருக்குற இதய நோய் ஆபத்தை நாம எளிமையாகவும், சக்தி வாய்ந்த விதத்திலயும் முன்கூட்டியே கண்டறியலாம். கவனிக்கப்படாமல் போகக்கூடிய நோயாளிகளைக் கண்டறிய இது ஒரு அருமையான வழி."

இனிமேல் இதய நோய் ஆபத்தைப் பார்க்க, BMI-ஐ மட்டும் நம்பாம, நம்மளோட இடுப்பு-உயர விகிதத்தையும் (WHtR) கணக்குல எடுத்துக்கணும். இது, ஆபத்துல இருக்கிறவங்களுக்கு சீக்கிரமா சிகிச்சை கொடுக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com