ராஜஸ்தான் அஜ்மீரில் தடம் புரண்ட ரயில்…அலறிய பயணிகள்!

Derailed
Derailed

நான்கு கோச்கள் கொண்ட அதி விரைவு ரயில், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரின் மதர் ரயில் நிலையத்திற்கு அருகே நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “மதார் ரயில் நிலையம் அருகே சபர்மதி – ஆக்ரா அதி விரைவு ரயில் இன்ஜினுடன் நான்குப் பெட்டிகளும் தடம் புரண்டன. சம்பவம் அறிந்த மீட்புக் குழுவினர்கள் விரைவாக இந்த இடத்திற்கு வந்துவிட்டனர். இந்த விபத்தில் உயிர் சேதமோ காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.

நாங்கள் பொதுமக்களிடம் இதுப்பற்றி கேட்டபோது, அவர்கள் தூங்கிக் கொண்டு இருக்கும்போது பலத்த சத்தம் கேட்டதாகக் கூறினர். மேலும் இது 1 மணியளவில் நடந்ததாகவும் கூறினார்கள். தற்போது ரயில்வே பாதுகாப்புப் படை, அரசு ரயில்வே காவல்துறை மற்றும் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

வடமேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான சாஷி கிரன் கூறியதாவது, “வண்டி எண் 12548 சபர்மதியிலிருந்து ஆக்ரா சென்றபோது மதார் நிலையத்திற்கு அருகே இன்றுத் தடம் புரண்டது. நான்கு கோச்கள் மற்றும் இன்ஜின் ஆகியவைத் தடம் புரண்டன. பெரியக் காயங்கள் யாருக்கும் இல்லை. சிறிதளவு காயம் கொண்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றோம்”

மேலும் அஜ்மீர் ரயில்வேயின் கோட்ட மேலாளர் கூறியதாவது, “எங்கள் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து விபத்திற்கானக் காரணத்தை விசாரித்து வருகின்றோம். என்றார். மேலும் அஜ்மீர் ரயில் நிலையம் சார்பாக 0145-2429642 என்ற உதவி எண்ணும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விபத்தின் காரணமாக அந்த வழியாகச் செல்லும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 ரயில்கள் வழிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
குன்னூரில் 6 நாட்களாகப் தொடரும் காட்டுத் தீ... போராடி வரும் வனத்துறையினர்!
Derailed

ஒரு மாதத்திற்கு முன்னதாக ஒரு சரக்கு ரயில் அந்திரா மாநிலத்தின் விஜயவாடா அருகே ராயனபாடு என்றப் பகுதியில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்ற ஆண்டு டிசம்பர் மாதமும் இதுபோன்ற ஒரு கொல்கத்தா அதிவிரைவு ரயில் ராஜஸ்தான் அஜ்மீரில் தடம் புரண்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com