
நம்மில் பலருக்கு ஊருக்கு போகிறோம் என பெற்றோர் சொன்னாலே நம் மனதிற்கு முதலில் வருவது ரயிலில் பயணிக்க போறோம் என்பது தான்.. எல்லோருக்கும் புடித்த மற்றும் மிகவும் எளிதான பயணம் என்றால் அது ரயில் பயணம் தான்... அப்படிப்பட்ட ரயில் பயணத்தின் போது சில பிரச்சனைகளை நாம் சந்திக்கும்போது என்ன பண்ணுவது என தெரியாமல் பல சமயம் இருந்து இருப்போம். இனிமேல் அந்த கவலை நமக்கு இல்லை.
ரயில் பயணத்தின்போது தேவைப்படும் பல வசதிகளைப் பெற ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை உள்ளது.ரயில்வேயின் வாட்ஸ்அப் சேவை தானியங்கி முறையில் செயல்படுகிறது. இதில் மனிதத் தலையீடு ஏதும் இல்லை. வாட்ஸ்அப்பில் உள்ள ரயில்வேயின் சாட்பாட் (chatbot) உடன் உரையாடுவதன் மூலம் ரயில் பயணிகளுக்குத் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக ரயில் பயணங்களின் போது பிரச்சினைகளை எழுப்ப X (முன்னர் Twitter) போன்ற சமூக ஊடக தளங்களை பயணிகள் பெரிதும் நம்பியிருந்தனர்.இனி அந்த பிரச்சனை உங்களுக்கு இல்லை. வாட்ஸ்அப் வழியாக புகார்களைப் பதிவு செய்யலாம்..
RailMadad WhatsApp chatbot-ஐப் பயன்படுத்தி புகாரைப் பதிவு செய்ய, பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் 7982139139 என்ற எண்ணை சேமித்த பிறகு, சாட்போட்டின் மெசேஜ் பாக்ஸுக்குச் சென்று ஆங்கிலத்தில் ஹாய் சொல்லுங்கள். சற்றுநேரத்தில் ஒரு மெசேஜ் வரும். அதில் PNR நிலை, ரயிலில் உள்ள உணவு, எனது ரயில் எங்கே இருக்கிறது, ரிட்டர்ன் டிக்கெட் பதிவு, ரயில் அட்டவணை, ரயில் பயணத்தின் போது கோச் நிலை, புகார் அளித்தல் போன்ற ஆப்ஷன்கள் தெரியும். இதில் தேவையான சேவையைத் தேர்வு செய்து, தொடர்ந்து சாட்பாட் கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றலாம்.
“Hi,” “Hello,” அல்லது “Namaste” என டைப் செய்து அரட்டையைத் தொடங்கலாம். உடனடியாக, RailMadad-ல் இருந்து வரவேற்புச் செய்தியைப் பெறுவார்கள். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் தங்கள் PNR எண்ணை உள்ளிட வேண்டும், அதே நேரத்தில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வைத்திருப்பவர்கள் தங்கள் டிக்கெட்டில் அச்சிடப்பட்ட UTS எண்ணை உள்ளிடலாம். சரிபார்க்கப்பட்டவுடன், புகார் நிலையப் பிரச்சினையா அல்லது பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனையா என்பதைத் தேர்ந்தெடுக்க பயனர்கள் கேட்கப்படுவார்கள்.
இந்த அம்சம் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு மட்டும் அல்ல - பொது ரயில் பெட்டிகளில் பயணிப்பவர்கள் கூட புகார்களைப் பதிவு செய்யலாம். மேலும், chatbot புகார்களுக்காக மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது